தூயா துயில்லாய்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிகார்த்திக் & கீர்த்தனா வைத்தியநாதன்சைமன் கே. கிங்ராஜா பீமா

Thooya Song Lyrics in Tamil


—BGM—

பெண் : தூயா துணையாய் நீ வருவாயா…
தீயா வளர் காதல் தருவாயா…
பார்வை முதற்பார்வை கொண்டென்னை…
வருங்காலம் முழுதும் நீ காண்பாயா…

பெண் : வருடங்கள் மாறும்…
நிமிடங்கள் மாறும்…
ஒரு பொழுதும் நீ மாறாதே…

பெண் : புது புது புது வார்த்தை நீ பேசாதே…
வித வித வித வாசம் நீ வீசாதே…
தினம் தினம் ஒரு வண்ணம் நீ பூசாதே… ஏ…
உன்னை போலே இரு நீ மாறாதே…

—BGM—

ஆண் : தூயா துயிலாய் நீ தொடர்வாயா…
ஓயா அலை போல தொடுவாயா…
மாறா வளர் காதல் முரண் அன்றோ…
மாற்றம் அழகென்றால் விடுவாயா…

ஆண் : உறைந்திடும் ஆழி…
முறை அல்ல தோழி…
சிறையினில் காதல் பூட்டாதே…

ஆண் : புது புது புது வார்த்தைகள் நான் பேச…
வித வித வித வாசங்கள் நீ வீச…

பெண் : தினம் தினம் பல வண்ணங்கள் நான் பூச…
மாறும் காதல் கண்டு நீ கண் கூச… அ…
கண் கூச… அ…

—BGM—

ஆண் : நிலவெழும் வானம் போல…
கிழிந்திடும் மேகம் போல…
மழை விழும் பூமி போல…
நனைந்திடும் காட்டை போல…

ஆண் : குளிர்ந்திடும் பூக்கள் போல…
எறிந்திடும் வேர்கள் போல…
உறைந்திடும் காதல் போல…
மறைந்திடும் நாணம் போல…

பெண் : குளிர் வெயில் மாறும்…
பனி புயல் மாறும்…
சிறு துகளும் நீ மாறாதே…

ஆண் : புது புது புது வார்த்தைகள் நான் பேச…
வித வித வித வாசங்கள் நீ வீச…

ஆண் : தினம் தினம் பல…
வண்ணங்கள் நான் பூச…

பெண் : உன்னை போலே இரு…
நீ மாறாதே…

ஆண் : தூயா துயிலாய் நீ தொடர்வாயா…
ஓயா அலை போல தொடுவாயா…
மாறா வளர் காதல் முரண் அன்றோ…
மாற்றம் அழகென்றால் விடுவாயா…

பெண் : வருடங்கள் மாறும்…
நிமிடங்கள் மாறும்…
ஒரு பொழுதும் நீ மாறாதே…

ஆண் : ஹோ… ஓ…
புது புது புது வார்த்தைகள் நான் பேச…
வித வித வித வாசங்கள் நீ வீச…

ஆண் : தினம் தினம் பல வண்ணங்கள் நான் பூச…
மாறும் காதல் கண்டு…
கண் கூச… கண் கூச…

—BGM—


Notes : Thooya Song Lyrics in Tamil. This Song from Raja Bheema (2022). Song Lyrics penned by Madhan Karky. தூயா துயில்லாய் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading