திட்டம் போட தெரியல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விக்னேஷ் சிவன்அனிருத் ரவிசந்தர்அனிருத் ரவிசந்தர்கோலமாவு கோகிலா

Thittam Poda Theriyala Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : திட்டம் போட தெரியல…
பயப்பட புடிக்கல…
தீயினு தெரிஞ்சும் தள்ளி போக முடியல…

ஆண் : வேற வழி தெரியல…
நல்ல வழி கிடைக்கல…
அவளுக்கு ஒண்ணுன்னாதான் தப்பும் தப்பில்ல…

ஆண் : கனவெல்லாம் வரவில்ல…
என் கண்ண மூட துணிவில்ல…
கடவுளை தொல்லை பண்ணி கதற தெரியல…

ஆண் : எது சரி புரியல…
இங்க தப்பு எது தெரியல…
வளையுற நெளியுற ஆளா பொறந்து தொலையல…

ஆண் : வலி தாங்கல அதனால வேற வழியே இல்ல…
வலி தாங்கல அதனால வேற வழியே இல்ல…

ஆண் : வலி தாங்கல வலி தாங்க இனி தெம்பே இல்ல…
அவளுக்கு ஒண்ணுன்னாதான் தப்பும் தப்பில்ல…

ஆண் : உயிர் போகல அது இருக்க வரைக்கும் கவலை இல்ல…
உயிர் போகல அது இருக்க வரைக்கும் கவலை இல்ல…

ஆண் : உயிர் போகல அத தவற வேற தேவ இல்ல…
வளையுற நெளியுற ஆளா பொறந்து தொலையல…

—BGM—

ஆண் : யாருமே போகாத…
தூரமே தெரியாத…
ஒத்தை அடி பாதை ஒன்னு தேர்ந்தெடுத்தேனே…

ஆண் : மூடவே முடியாத…
ஆழமும் தெரியாத…
குழி ஒன்னில் என்னை நானே தள்ளிவிட்டேனே…

ஆண் : எல்லாருக்கும் வானம் நல்லாருக்கும் போது…
எல்லாருக்கும் வானம் நல்லாருக்கும் போது…
நான் பாக்கும்போது மட்டும் கருத்து போகுதே…

ஆண் : மழை கூட வேணாம்…
சின்ன தூறல் போதும்…
ஏதோ ஒரு வெளிச்சம் தேடி முழிச்சி இருக்கேனே…

ஆண் : வலி தாங்கல அதனால வேற வழியே இல்ல…
வலி தாங்கல அதனால வேற வழியே இல்ல…

ஆண் : வலி தாங்கல வலி தாங்க இனி தெம்பே இல்ல…
அவளுக்கு ஒண்ணுன்னா தான் தப்பும் தப்பில்ல…

ஆண் : உயிர் போகல அது இருக்க வரைக்கும் கவலை இல்ல…
உயிர் போகல அது இருக்க வரைக்கும் கவலை இல்ல…

ஆண் : உயிர் போகல அத தவற வேற தேவ இல்ல…
வளையுற நெளியுற ஆளா பொறந்து தொலையல…

ஆண் : திட்டம் போட தெரியல…
பயப்பட புடிக்கல…
தீயினு தெரிஞ்சும் தள்ளி போக முடியல…

ஆண் : வேற வழி தெரியல…
நல்ல வழி கிடைக்கல…
அவளுக்கு ஒண்ணுன்னாதான் தப்பும் தப்பில்ல…

—BGM—


Notes : Thittam Poda Theriyala Song Lyrics in Tamil. This Song from Kolamaavu Kokila (2018). Song Lyrics penned by Vignesh Shivan. திட்டம் போட தெரியல பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading