திருப்பாச்சி அருவாள

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஸ்ரீராம் & கல்பனாஏ.ஆர்.ரகுமான்தாஜ் மஹால்

Thirupachi Aruvalla Song Lyrics in Tamil

—BGM—

ஆண் : திருப்பாச்சி அருவாள தீட்டிகிட்டு வாடா வாடா…
திருப்பாச்சி அருவாள தீட்டிகிட்டு வாடா வாடா…

—BGM—

ஆண் : திருப்பாச்சி அருவாள தீட்டிகிட்டு வாடா வாடா…

—BGM—

ஆண் : திருப்பாச்சி அருவாள தீட்டிகிட்டு வாடா வாடா…
சிங்கம் பெத்த பிள்ளையின்னு தெரிய வைப்போம் வாடா வாடா…

—BGM—

ஆண் : எட்டு தெச தொறந்திருக்கு எட்டு வச்சு வாடா வாடா…
எட்ட நிக்கும் சூரியன எட்டி தொடு வாடா வாடா…

—BGM—

ஆண் : போர் தானே நம்ம ஜாதி பொழுதுபோக்கு வாடா வாடா…
பூவெல்லாம் நம்ம ஊரில் புலிநகமா மாறும் வாடா…

ஆண் : வெள்ளாட்டு கூட்டமுன்னு வெளிய சொன்ன ஆளுகள…
வெள்ளாவியில் போட்டு வெளுத்துக்கட்டு வாடா வாடா…

ஆண் : திருப்பாச்சி அருவாள தீட்டிகிட்டு வாடா வாடா…
சிங்கம் பெத்த பிள்ளையின்னு தெரிய வைப்போம் வாடா வாடா…

—BGM—

பெண் : எங்கூரு பொம்பளைய மோப்பமிட வந்தவன…
எங்கசியான் மூக்கறுத்தாக…

ஆண் : எங்காட்ட திருடி தின்னு சப்பு கொட்டி நின்னவன…
எங்காத்தா நாக்கறுத்தாக…

பெண் : எங்க குறும்பாட்டு கறி கொழம்பு…
குளிதலையில் மண மணக்கும் வாசத்துக்கே எச்சிவிட்டீக…

ஆண் : நாங்க குளிச்சி அனுப்பி வச்ச…
கொறட்டாத்து தண்ணியில ஏண்டி அம்மா கறி சமைச்சீங்க…

பெண் : அட கோம்பா மான் தோப்புல…
கொல கொலயா காய் திருடி கோவணத்த தவறவிட்டீக…

ஆண் : அந்த கோவணத்த கொண்டுபோய்…
அப்பனுக்கு செலவில்லாம ரிப்பனுக்கு வெட்டிகிட்டீக…

பெண் : அட களவாணி கோத்திரமே காளமாட்டு…
அட களவாணி கோத்திரமே…
காளமாட்டு மூத்திரமே…
எப்ப நீங்க திருந்தப்போறீங்க…

—BGM—

ஆண் : திருப்பாச்சி அருவாள தீட்டிகிட்டு வாடா வாடா…
சிங்கம் பெத்த பிள்ளையின்னு தெரிய வைப்போம் வாடா வாடா…

ஆண் : எட்டு தெச தொறந்திருக்கு எட்டு வச்சு வாடா வாடா…
எட்ட நிக்கும் சூரியன எட்டி தொடு வாடா வாடா…

—BGM—

ஆண் : உப்பு தின்னா தண்ணி குடி…
தப்பு செஞ்சா தலையிலடி…
பரம்பரையா எங்க கொள்கையடா…

ஆண் : மானம் தானே வேட்டி சட்ட…
மத்ததெல்லாம் வாழ மட்ட…
மானம் காக்க வீரம் வேணுமடா…

ஆண் : அட சோளக்கூழு கேட்டு வந்தா…
சோறு போட்டு விசிறிவிடும்…
ஈரமுள்ளது எங்க வம்சமடா…

ஆண் : சோறு போட்டு கழுத்தறுத்தா…
கூறு போட்டு பங்கு வைக்கும்…
வீரம்தானே எங்க அம்சமடா…

ஆண் : நாங்க வம்புச்சண்டக்கு போறதில்ல…
வந்த சண்டைய விடுவதில்ல…
வரிப்புலிதான் தோத்ததில்லையடா…

—BGM—

ஆண் : எங்க உறைய விட்டு வாள் எடுத்தா…
ரத்த ருசி காட்டி வைக்கும்…
வழக்கம் எங்க குல வழக்கமடா…

ஆண் : நான் தட்டி வச்சா புலி அடங்கும்…
எட்டு வச்சா மல உருகும்…
தொட்டதெல்லாம் துலங்க போகுதடா…

ஆண் : திருப்பாச்சி அருவாள தீட்டிகிட்டு வாடா வாடா…
சிங்கம் பெத்த பிள்ளையின்னு தெரிய வைப்போம் வாடா வாடா…

—BGM—

ஆண் : எட்டு தெச தொறந்திருக்கு எட்டு வச்சு வாடா வாடா…
எட்ட நிக்கும் சூரியன எட்டி தொடு வாடா வாடா…

ஆண் : போர்தானே நம்ம ஜாதி பொழுதுபோக்கு வாடா வாடா…
பூவெல்லாம் நம்ம ஊரில் புலிநகமா மாறும் வாடா…

ஆண் : வெள்ளாட்டு கூட்டமுன்னு வெளிய சொன்ன ஆளுகள…
வெள்ளாவியில் போட்டு வெளுத்துக்கட்டு வாடா வாடா…

ஆண் : திருப்பாச்சி அருவாள தீட்டிகிட்டு வாடா வாடா…
திருப்பாச்சி அருவாள தீட்டிகிட்டு வாடா வாடா…

Notes : Thirupachi Aruvalla Song Lyrics in Tamil . This Song from Taj Mahal (1999). Song Lyrics penned by Vairamuthu. திருப்பாச்சி அருவாள பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading