நகரும் நகரும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிகார்த்திக்கோபி சுந்தர்தோழா

Nagarum Song Lyrics in Tamil


BGM

ஆண் : நகரும் நகரும் நேர முள்…
நமையும் நகரச் சொல்லுதே…
மனமோ பின்னே செல்லுதே…
இது ஏன்… இது ஏன்…

ஆண் : மலரும் உறவும் உண்மையே…
நிகழும் பிரிவும் உண்மையே…
மனதின் கனமும் உண்மையே…
அது ஏன்… அது ஏன்…

ஆண் : ஏன் வந்தாய் நீ யாரோ…
நீ போனால் நான் யாரோ…

ஆண் : நகரும் நகரும் நேர முள்…
நமையும் நகரச் சொல்லுதே…
மனமோ பின்னே செல்லுதே…
இது ஏன்… இது ஏன்…

BGM

ஆண் : உனக்கென ஒரு இடம் இருந்ததை மறக்கிறாய்…
உணர்ந்ததும் திறக்கிறாய்…
ஏன் நெஞ்சே… ஏன் நெஞ்சே…

ஆண் : புது ஒரு வழித்தடம் கிடைத்திட துடிக்கிறாய்…
கிடைப்பதை மறுக்கிறாய்…
ஏன் நெஞ்சே… ஏன் நெஞ்சே…
இது ஏன் நண்பனே… இது ஏன்…

ஆண் : நகரும் நகரும் நேர முள்…
நமையும் நகரச் சொல்லுதே…
மனமோ பின்னே செல்லுதே…
இது ஏன்… இது ஏன்…

ஆண் : ஏன் வந்தாய் நீ யாரோ…
நீ போனால் நான் யாரோ…

BGM

ஆண் : கசப்புகள் இனிப்பதும்…
உடைந்ததை இணைப்பதும்…
வெறுத்ததை அணைப்பதும்…
ஏன் நெஞ்சே… ஏன் நெஞ்சே…

ஆண் : நினைவிலே வசிப்பதும்…
இதயத்தில் பசிப்பதும்…
தனிமையில் தவிப்பதும்…
ஏன் நெஞ்சே… ஏன் நெஞ்சே…
இது ஏன் நண்பனே… இது ஏன்…

ஆண் : மலரும் உறவும் உண்மையே…
நிகழும் பிரிவும் உண்மையே…
மனதின் கனமும் உண்மையே…
இது ஏன்… இது ஏன்…

ஆண் : ஏன் வந்தாய் நீ யாரோ…
நீ போனால் நான் யாரோ…

BGM


Notes : Nagarum Song Lyrics in Tamil. This Song from Thozha (2016). Song Lyrics penned by Madhan Karky. நகரும் நகரும் பாடல் வரிகள்.


Scroll to Top