திரைக்கடல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
உமா தேவிசைந்தவிசாம் சி.எஸ்Guardian

Thiraikadal Song Lyrics in Tamil


BGM

பெண் : நான் திரைக்கடலா நீ திரவியமா…
தேட தேட…
நான் கருப்பொருளா நீ அருந்தமிழா…
பாட பாட…

பெண் : காற்றின் திசை அறிந்து…
மூங்கில் இசைப்பது போல்…
உயிர்கள் பசி தீர்க்கும் தாய் நீயடி…

பெண் : தூறும் தூறல் எல்லாம்…
ஆற்றில் சேர்வது போல்…
சேரும் சொந்தம் எல்லாம் நீதானடி…
நீ போதும் வாழவை வாழ…

BGM

பெண் : தேடி நான் நாடிடும்…
தெய்வம் நீயடி…
வாடி நான் வீழ்கையில் தாங்கும்…
தாயும் நீ…

பெண் : காலத்தின் ஓடையில் காகித ஓடமாய்…
பாதியில் மூழ்கிடும் கோலம் நியாயமா…
பூவே இனிமேல் அடி என் வழி அறிவேன்…
உன் மொழியினிலே அடி என் உலகறிவேன்…

பெண் : பிள்ளை நீ தாய்தானே…
தாயான சேய் நானே…
கண்ணே கனி அமுதே…

பெண் : நான் திரைக்கடலா நீ திரவியமா…
தேட தேட…

BGM

பெண் : வாள்முனை காட்டியே வாழ்க்கை ஓடுதே…
பால் முகம் பார்த்துதான் வாழ தோணுதே…

பெண் : கண்ணிமை கூட்டிலே வைத்து பூட்டவா…
காரணம் ஆயிரம் தாண்டி காக்கவா…

பெண் : உன் நிழல் மறைந்தாள் அடி என் நிலை குலையும்…
உன் தலை கோதி என் இரவனையும்…
முத்தங்கள் சோறாக நீ ஊட்டும் தாயாக…
மயிலே மயிலிறகே…

BGM


Notes : Thiraikadal Song Lyrics in Tamil. This Song from Guardian (2024). Song Lyrics penned by Uma Devi. திரைக்கடல் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading