ஆசை மழை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாஎம்.எம். மானசி & ஜித்தின் ராஜ்ஜூபின்சத்தமின்றி முத்தம் தா

Aasai Mazhai Song Lyrics in Tamil


BGM

பெண் : சத்தம் இன்றி ஒரு முத்தம் தா…
சத்தம் இன்றி ஒரு முத்தம் தா…

BGM

பெண் : ஆசை மழை வீசும் பொழுது…
கூச்சம் குடை விரித்தால் தவறு…
யாரும் இல்லை நீயும் நானும் ஆடலாம்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : காதல் ஒரு மூன்றே எழுத்து…
காமம் கூட மூன்றே எழுத்து…
ஆறு எழுத்தின் ஆழம் என்ன பார்க்கலாம்…

பெண் : மகரந்த சேர்க்கைதானடா…
மலருக்கு பெருமை சேர்ப்பது…
உதடுகள் வாசல் ஆகுதே உள்ளே நுழைந்திடு…

பெண் : சத்தம் இன்றி ஒரு முத்தம் தா…
சத்தம் இன்றி ஒரு முத்தம் தா…

BGM

பெண் : தீவொன்று பிடித்து…
அதில் பாய் ஒன்று விரித்து…
வா பட்டம் பெறலாம்…
அந்தக் காதலை படித்து…

பெண் : நீ அருகினில் வரும் நேரம்…
இருதயம் என்னும் கடிகாரம்…
வேக வேகமாக துடிக்கிறதே…
என் தேகம் எங்கும் வேர்வை வலிகிறதே…

பெண் : மழை அருந்தும் பறவையை போல்…
இதழினில் அருந்திட வா…

பெண் : சத்தம் இன்றி ஒரு முத்தம் தா…
சத்தம் இன்றி ஒரு முத்தம் தா…

பெண் : ஆசை மழை வீசும் பொழுது…
கூச்சம் குடை விரித்தால் தவறு…
யாரும் இல்லை நீயும் நானும் ஆடலாம்…

BGM

ஆண் : வானவில் அழகா…
ஹே… உன் உடல் அழகா…
ஒரு போட்டி வைத்தேன்…
அதில் நீதான் ஜெயித்தாய்…

ஆண் : வாசனைகளின் ஆசனமே…
வாடிடாத பூவினமே…
மூடி வைத்த கோடி அதிசயமே…
பார்க்கும்போது தாக்கும் ஆயுதமே…
இரு உடலில் ஒரு இதயம் துடி துடி துடிக்கிறதே…

ஆண் : ஆசை மழை வீசும் பொழுது…
கூச்சம் குடை விரித்தால் தவறு…
யாரும் இல்லை நீயும் நானும் ஆடலாம்…

ஆண் : காதல் ஒரு மூன்றே எழுத்து…
காமம் கூட மூன்றே எழுத்து…
ஆறு எழுத்தின் ஆழம் என்ன பார்க்கலாம்…

பெண் : மகரந்த சேர்க்கைதானடா…
மலருக்கு பெருமை சேர்ப்பது…
உதடுகள் வாசல் ஆகுதே உள்ளே நுழைந்திடு…


Notes : Aasai Mazhai Song Lyrics in Tamil. This Song from Sathamindri Mutham Tha (2024). Song Lyrics penned by Viveka. ஆசை மழை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading