தேடும் கண் பார்வை

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஎம்.எஸ்.விஸ்வநாதன் & இளையராஜாமெல்ல திறந்தது கதவு

Thedum Kann Paarvai Song Lyrics in Tamil


ஆண் : தேடும் கண் பார்வை தவிக்க… துடிக்க…
தேடும் கண் பார்வை தவிக்க… துடிக்க…
சொன்ன வார்த்தை காற்றில் போனதோ…
வெறும் மாயமானதோ… ஓ…

பெண் : தேடும் பெண் பாவை வருவாள்… தொடுவாள்…
தேடும் பெண் பாவை வருவாள்… தொடுவாள்…
கொஞ்ச நேரம் நீயும் காத்திரு…
வரும் பாதை பார்த்திரு…

ஆண் : தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க…

—BGM—

ஆண் : காண வேண்டும் சீக்கிரம்…
என் காதல் ஓவியம்…
வாராமலே என்னாவதோ…
என் ஆசை காவியம்…

பெண் : வாழும் காலம் ஆயிரம்…
நம் சொந்தம் அல்லவா…
கண்ணாளனே நல்வாழ்த்துகள்…
என் பாட்டில் சொல்லவா…

ஆண் : கனிவாய் மலரே…
உயிர் வாடும்போது ஊடலென்ன…
பாவம் அல்லவா…

பெண் : தேடும் பெண் பாவை வருவாள்… தொடுவாள்…

—BGM—

ஆண் : தேடி தேடி பார்க்கிறேன்…
என் கால்கள் ஓய்ந்ததே…
காணாமலே இவ்வேளையில்…
என் ஆவல் தீருமோ…

பெண் : காற்றில் ஆடும் தீபமோ…
உன் காதல் உள்ளமே…
நீ காணலாம் இந்நாளிலே…
என் மேனி வண்ணமே…

ஆண் : பிரிந்தோம்… இணைவோம்…

பெண் : இனி நீயும் நானும் வாழ வேண்டும்…
வாசல் தேடி வா…

ஆண் : தேடும் கண் பார்வை தவிக்க… துடிக்க…

பெண் : தேடும் பெண் பாவை வருவாள்… தொடுவாள்…

ஆண் : சொன்ன வார்த்தை காற்றில் போகுமோ…

பெண் : வெறும் மாயமாகுமோ…

ஆண் : தேடும் கண் பார்வை தவிக்க…

பெண் : துடிக்க…


Notes : Thedum Kann Paarvai Song Lyrics in Tamil. This Song from Mella Thiranthathu Kadhavu (1986). Song Lyrics penned by Vaali. தேடும் கண் பார்வை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading