என்னவென்று சொல்வதம்மா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர்.வி.உதயகுமார்எஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாராஜகுமாரன்

Ennavendru Solvathamma Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : என்னவென்று சொல்வதம்மா…
வஞ்சி அவள் பேரழகை…
சொல்ல மொழி இல்லையம்மா…
கொஞ்சி வரும் தேரழகை…

ஆண் : அந்தி மஞ்சள் நிறத்தவளை…
என் நெஞ்சில் நிலைத்தவளை…
நான் என்னென்று சொல்வேனோ…
அதை எப்படிச் சொல்வேனோ…

ஆண் : அவள் வான்மேகம் காணாத பால்நிலா…
இந்த பூலோகம் பாராத தேன் நிலா…

ஆண் : என்னவென்று சொல்வதம்மா…
வஞ்சி அவள் பேரழகை…
சொல்ல மொழி இல்லையம்மா…
கொஞ்சி வரும் தேரழகை…

ஆண் : அந்தி மஞ்சள் நிறத்தவளை…
என் நெஞ்சில் நிலைத்தவளை…
நான் என்னென்று சொல்வேனோ…
அதை எப்படிச் சொல்வேனோ…

—BGM—

ஆண் : தெம்மாங்கு பாடிடும் சின்னவிழி மீன்களும்…
பொன்னூஞ்சல் ஆடிடும் கன்னி கருங்கூந்தலோ…
முத்தாடும் மேடை பார்த்து வாடிப் போகும் வான்பிறை…
முத்தாரம் நீட்டும் மார்பில் ஏக்கம் தேக்கும் தாமரை…

ஆண் : வண்ணப் பூவின் வாசம்…
வந்து நேசம் பேசும்…
அவள் நான் பார்க்க தாங்காமல் நாணுவாள்…
புதுப் பூக்கோலம்தான் காலில் போடுவாள்…

ஆண் : என்னவென்று சொல்வதம்மா…
வஞ்சி அவள் பேரழகை…
சொல்ல மொழி இல்லையம்மா…
கொஞ்சி வரும் தேரழகை…

ஆண் : அந்தி மஞ்சள் நிறத்தவளை…
என் நெஞ்சில் நிலைத்தவளை…
நான் என்னென்று சொல்வேனோ…
அதை எப்படிச் சொல்வேனோ…

ஆண் : அவள் வான்மேகம் காணாத பால்நிலா…
இந்த பூலோகம் பாராத தேன் நிலா… ஆஹாஹா…

—BGM—

ஆண் : ஆஹா… கண்ணோரம் ஆயிரம் காதல்கணை வீசுவாள்…
முந்தானைச் சோலையில் தென்றலுடன் பேசுவாள்…
ஆகாயம் மேகமாகி ஆசைத் தூறல் போடுவாள்…
நீரோடை போல நாளும் ஆடிப் பாடி ஓடுவாள்…

ஆண் : அதிகாலை ஊற்று…
அசைந்தாடும் நாற்று…
உயிர் மூச்சாகி ரீங்காரம் பாடுவாள்…
இந்த ராஜாவின் தோளோடு சேருவாள்…

ஆண் : என்னவென்று சொல்வதம்மா…
வஞ்சி அவள் பேரழகை…
சொல்ல மொழி இல்லையம்மா…
கொஞ்சி வரும் தேரழகை…

ஆண் : அந்தி மஞ்சள் நிறத்தவளை…
என் நெஞ்சில் நிலைத்தவளை…
நான் என்னென்று சொல்வேனோ…
அதை எப்படிச் சொல்வேனோ…

ஆண் : அவள் வான்மேகம் காணாத பால்நிலா…
இந்த பூலோகம் பாராத தேன்நிலா…

ஆண் : என்னவென்று சொல்வதம்மா…
வஞ்சி அவள் பேரழகை…
சொல்ல மொழி இல்லையம்மா…
கொஞ்சி வரும் தேரழகை…

ஆண் : அந்தி மஞ்சள் நிறத்தவளை…
என் நெஞ்சில் நிலைத்தவளை…
நான் என்னென்று சொல்வேனோ…
அதை எப்படிச் சொல்வேனோ…


Notes : Ennavendru Solvathamma Song Lyrics in Tamil. This Song from Rajakumaran (1994). Song Lyrics penned by R. V. Udayakumar. என்னவென்று சொல்வதம்மா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading