சித்தகத்தி பூக்களே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர்.வி.உதயகுமார்எஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராஇளையராஜாராஜகுமாரன்

Sithagathi Pookale Song Lyrics in Tamil


BGM

பெண் : சித்தகத்தி பூக்களே சுத்தி வர பாக்குதே…
அத்தி மர தோப்பிலே ஒத்திகைய கேக்குதே…
அத்த மகனே அத்த மகனே…
சொத்து சுகம் யாவும் நீதான்… ஹோய்…

ஆண் : சித்தகத்தி பூக்களே சுத்தி வர பாக்குதே…
அத்தி மர தோப்பிலே ஒத்திகைய கேக்குதே…
அத்த மகளே அத்த மகளே…
சொத்து சுகம் யாவும் நீதான்… ஹோய்…

பெண் : சித்தகத்தி பூக்களே சுத்தி வர பாக்குதே…
அத்தி மர தோப்பிலே ஒத்திகைய கேக்குதே…

BGM

பெண் : நாள் பாத்து பாத்து ஆளான நாத்து…
தோள் சேரதானே வீசும் பூங்காத்து…

ஆண் : ஆனந்த கூத்து நானாட பாத்து…
பூ ஓரம் தானே ஊறும் தேனூத்து…

பெண் : நான் மாலை சூட நாள் பாரய்யா…
ஆதாரம் நீதான் வேறாரய்யா…

ஆண் : பட்டி ரொட்டி மேளம் கொட்டி முழங்க…
தொட்டு விட நாணம் விட்டு விலக…

பெண் : திட்டமிட்டு வாழ வாரேன் மாமா…
சட்டம் ஒன்னு போடேன்… ஹோய்…

ஆண் : சித்தகத்தி பூக்களே சுத்தி வர பாக்குதே…
அத்தி மர தோப்பிலே ஒத்திகைய கேக்குதே…

பெண் : அத்த மகனே அத்த மகனே…
சொத்து சுகம் யாவும் நீதான்… ஹோய்…

பெண் : சித்தகத்தி பூக்களே சுத்தி வர பாக்குதே…
ஆண் : அத்தி மர தோப்பிலே ஒத்திகைய கேக்குதே…

BGM

ஆண் : ஆஆஆ… பூந்தேரில் ஏறி ஏழேழு லோகம்…
ஊர் கோலமாக நானும் போவோமா…

பெண் : பாரெல்லாம் ஜோடி நாம் என்றும் பாடி…
ஊராரும் நாளும் வாழ்த்த நாமும் வாழ்வோமா…

ஆண் : நீரின்றி வாழும் மீன் ஏதம்மா…
நீ இன்றி நானும் வீண் தானம்மா…

பெண் : பட்டு உடல் மீட்டு தொட்டு அணைக்க…
தொட்டில் ஒன்னு ஆட முத்து பிறக்க…

ஆண் : கட்டிலறை பாடம் தாரேன் மானே…
கட்டளைய போடு… ஹோய்…

ஆண் : சித்தகத்தி பூக்களே சுத்தி வர பாக்குதே…
அத்தி மர தோப்பிலே ஒத்திகைய கேக்குதே…

பெண் : அத்த மகனே அத்த மகனே…
சொத்து சுகம் யாவும் நீதான்… ஹோய்…

பெண் : சித்தகத்தி பூக்களே சுத்தி வர பாக்குதே…
ஆண் : அத்தி மர தோப்பிலே ஒத்திகைய கேக்குதே…


Notes : Sithagathi Pookale Song Lyrics in Tamil. This Song from Rajakumaran (1994). Song Lyrics penned by R. V. Udayakumar. சித்தகத்தி பூக்களே பாடல் வரிகள்.


Scroll to Top