முதலாம் சந்திப்பில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்பி. உன்னிகிருஷ்ணன் & சுவர்ணலதாபரணிசார்லி சாப்ளின்

Mudhalaam Sandhippil Song Lyrics in Tamil


—BGM—

பெண் : முதலாம் சந்திப்பில்…
நான் அறிமுகம் ஆனேனே…
இரண்டாம் சந்திப்பில்…
என் இதயம் கொடுத்தேனே…

பெண் : மூன்றாம் சந்திப்பில்…
முகத்தை மறைத்தேன்…
நான்காம் சந்திப்பில்…
நகத்தை கடித்தேன்…

பெண் : காதல் வந்தது காதல் வந்தது…
காதல் வந்ததடா…
அட காதல் வந்தது காதல் வந்தது…
காதல் வந்ததடா…

ஆண் : ஐந்தாம் சந்திப்பில்…
நான் ஐக்கியம் ஆனேனே…
ஆறாம் சந்திப்பில்…
நான் பைத்தியம் ஆனேனே…

ஆண் : ஏழாம் சந்திப்பில்…
எட்டி பிடித்தேன்…
எட்டாம் சந்திப்பில்…
கட்டி பிடித்தேன்…

ஆண் : காதல் வந்தது காதல் வந்தது…
காதல் வந்ததடி…
அடி காதல் வந்தது காதல் வந்தது…
காதல் வந்ததடி…

ஆண் : இன்னும் கோடி கோடி ஆசை…
நெஞ்சில் உள்ளே உள்ளதடி…

பெண் : முதலாம் சந்திப்பில்…
நான் அறிமுகம் ஆனேனே…
இரண்டாம் சந்திப்பில்…
என் இதயம் கொடுத்தேனே…

—BGM—

ஆண் : அதிகாலை நேரத்திலே…
கோலங்கள் நீயும் போட…
தொலைவாக நான் நின்று…
உன்னை சந்திப்பேன்…

பெண் : நூறாண்டு வயதான…
உள்ளூரு நூலகத்தில்…
மறைவாக மறைவாக…
தினம் சந்திப்போம்…
பேருந்துக்குள்ளேதான்…
பெரு மூச்சால் சந்திப்போம்…

ஆண் : காலை நேரத்தில்…
உன் கடிதம் சந்திப்பேன்…
மாலை நேரத்தில்…
உன் மடியில் சந்திப்பேன்…

பெண் : சாயங்காலம் சாலை ஓரம்…
நீயும் நானும் பிாியும் நேரம்…
இருவரும் கூடி இமைகளை மூடி…
இதழால் சந்திப்போம்…

—BGM—

பெண் : இ.பி.கோ. சட்டம் போட்டு…
ஊர் அடங்க செய்தாலும்…
ஓடோடி ஒரு நொடியில்…
உன்னை சந்திப்பேன்…

ஆண் : இரு கையில் ஆணி வைத்து…
சிலுவைக்குள் அறைந்தாலும்…
உயிர் நீது உடன் வந்து…
உன்னை சந்திப்பேன்…
பூவாக நீ ஆனால்…
காற்றாகி சந்திப்பேன்…

பெண் : போதி மரமாக நீ மாறி போனாலும்…
புத்தமதமாகி நான் உன்னை சந்திப்பேன்…

ஆண் : ஆயுள் உள்ள காலம் வரை…
அன்பே நாமும் கூடி வாழ…
நம்மை பெற்ற அம்மா அப்பா…
இருவரை சந்திப்போம்…

பெண் : முதலாம் சந்திப்பில்…
நான் அறிமுகம் ஆனேனே…
இரண்டாம் சந்திப்பில்…
என் இதயம் கொடுத்தேனே…

பெண் : மூன்றாம் சந்திப்பில்…
முகத்தை மறைத்தேன்…
நான்காம் சந்திப்பில்…
நகத்தை கடித்தேன்…

பெண் : காதல் வந்தது காதல் வந்தது…
காதல் வந்ததடா…
அட காதல் வந்தது காதல் வந்தது…
காதல் வந்ததடா…
இன்னும் கோடி கோடி ஆசை…
நெஞ்சில் உள்ளே உள்ளதடா…


Notes : Mudhalaam Sandhippil Song Lyrics in Tamil. This Song from Charlie Chaplin (2002). Song Lyrics penned by Pa. Vijay. முதலாம் சந்திப்பில் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading