தவழ்ந்திடும் தங்கபூவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அரவிபாம்பே ஜெயஸ்ரீடி. இமான்வீர சிவாஜி

Thavazhnthidum Thangapoove Song Lyrics in Tamil


BGM

பெண் : தவழ்ந்திடும் தங்கபூவே…
தலை அசைக்கும் வெண்ணிலாவே…
மந்திர புன்னகைகள் உன்னில் தாராளம்…

பெண் : கருவறை வாசல் தாண்டி…
கைகளிலே வந்து சேர்ந்தாய்…
கதைகள் உன்னிடத்தில் சொல்ல ஏராளம்…

பெண் : மடியினில் என்னை சாய்ப்பேனே…
மார்பினில் உன்னை சுமப்பேனே…
உனதிரு விழிகளிலே எந்தன் கனவுகள்…
எனதுயிர் நீயின்றி இல்லை விடியல்கள்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : தவழ்ந்திடும் தங்க பூவே…
தலை அசைக்கும் வெண்ணிலாவே…
மந்திர புன்னகைகள் உன்னில் தாராளம்…

பெண் : கருவறை வாசல் தாண்டி…
கைகளிலே வந்து சேர்ந்தாய்…
கதைகள் உன்னிடத்தில் சொல்ல ஏராளம்…

BGM

பெண் : சில நேரம் கோவம் கொள்வாய்…
சிரித்தே பின் மாயம் செய்வாய்…
சிறு சிறு குறும்புகளாலே என்னை நீ வெல்வாயே…
அழகாய் எந்தன் தோளில் தூலிதான் நெய்வாயே…

பெண் : இமை சொல்லும் மொழியாவும் இனிமை கேட்பேன்…
இவள் கரம் பிடித்தே தான் உலகை ரசிப்பேன்…

பெண் : யாழ் இசைக்கும் உன் பேச்சு தாலாட்டு எனக்கு…
யாழினியே உன் மடியே அன்னை மடி எனக்கு…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : தவழ்ந்திடும் தங்க பூவே…
தலை அசைக்கும் வெண்ணிலாவே…
மந்திர புன்னகைகள் உன்னில் தாராளம்…

BGM

பெண் : அநியாய சேட்டை செய்வாய்…
அயர்ந்தே பின் தூக்கம் கொள்வாய்…
வரம் தரும் தேவதை நீயே வரமாய் வந்தாயே…
நிரமற்ற தூரிகை நானே வா்ணங்கள் தந்தாயே…

பெண் : எந்தன் மரணத்தின் நேரம் நெருங்கும்போதும்…
உந்தன் மலர் முகம் கண்டால் ஜனனம் மீண்டும்…

பெண் : விழிகளில் ஈரங்கள் நீராட்டிப் போகும்…
இவளன்றி என் நாட்கள் தனிமையில் சாகும்…

பெண் : தவழ்ந்திடும் தங்க பூவே…
தலை அசைக்கும் வெண்ணிலாவே…
மந்திர புன்னகைகள் உன்னில் தாராளம்…

பெண் : மடியினில் என்னை சாய்ப்பேனே…
மார்பினில் உன்னை சுமப்பேனே…

பெண் : உனதிரு விழிகளிலே எந்தன் கனவுகள்…
எனதுயிர் நீயின்றி இல்லை விடியல்கள்…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases


Notes : Thavazhnthidum Thangapoove Song Lyrics in Tamil. This Song from Veera Sivaji (2016). Song Lyrics penned by Aravi. தவழ்ந்திடும் தங்கபூவே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading