தப்புத்தண்டா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஷங்கர் மகாதேவன் & சுஜாதா மோகன்வித்யாசாகர்வில்லன்

Thappu Thanda Song Lyrics in Tamil


—BGM—

பெண் : தப்புத்தண்டா தப்புத்தண்டா தலைவா நீ செய்யவா…
வெயில்படா இடங்களை விளையாடித் தொடவா…

ஆண் : மன்மதன் அம்புகள் பாய்ந்திடும் வேளையில்…
புண்படும் அல்லவா உன் மார்பிலே ஒளியவா…

—BGM—

ஆண் : தப்புத்தண்டா தப்புத்தண்டா தலைவி நான் செய்யவா…
பெண் : வெயில்படா இடங்களை விளையாடித் தொடவா…

—BGM—

பெண் : களவு கொண்டோடிய கண்களைத் தூக்கத்தை…
என்னிடம் திருப்பிக் கொடு…
என் உடல் கொஞ்சம் சாயட்டும்…
உயிர் கொஞ்சம் தூங்கட்டும்…
ஒத்தடம் தந்து விடு…

ஆண் : ஓ… ஆயிரம் சேவைகள் கைவசம் உள்ளது…
அனுமதி தந்து விடு…
ஆடையும் அகிம்சையும் ஓரத்தில் தூங்கட்டும்…
வன்முறை முத்தம் கொடு…

பெண் : இடியோ மழையோ…
அது அறையில் இருக்கட்டுமே…
இரவோ பகலோ…
அது வெளியில் இருக்கட்டுமே…

ஆண் : நடந்து வரும் சித்திரமே…
நனைய விடும் சொப்பனமே…
சுட்டு விரல் தொட்டவுடன் தேன் வடியும் பூவே…
யாரிதழில் சுவை அதிகம் பார்ப்போம்…

—BGM—

பெண் : தப்புத்தண்டா தப்புத்தண்டா தலைவா நீ செய்யவா…
ஆண் : வெயில்படா இடங்களை விளையாடித் தொடவா…

—BGM—

ஆண் : தினம் தினம் ஓரிடம் உதிக்கிற போதும்…
சூரியன் புதியதடி…
தினம் தினம் ஓரிடம் சேர்கிற போதிலும்…
சுகவகை புதியதடி…

பெண் : இருபது வருடங்கள் இந்த சுகம் போதுமென்று…
சாயுது இளையகொடி…
இருபது நிமிடத்தில் இன்னும் கொஞ்சமென்று…
ஏங்குது பழையபடி…

ஆண் : ஆடை சரிந்தால்…
உன் அவசியம் பார்த்து வைப்பேன்…
ஜாடை புரிந்தால்…
உன் சங்கடம் தீர்த்து வைப்பேன்…

பெண் : மார்பழகு இந்திரனே…
மஞ்சள் நிற மன்னவனே…
உன் பெயரைச் சொன்னவுடன் பூத்துவிட்டேன் நானே…
ஓரிரவில் ஏழ்பிறவி வாழ்வேன்…

—BGM—

பெண் : தப்புத்தண்டா தப்புத்தண்டா தலைவா நீ செய்யவா…
ஆண் : வெயில்படா இடங்களை விளையாடித் தொடவா…

பெண் : மன்மதன் அம்புகள் பாய்ந்திடும் வேளையில்…
ஆண் : புண்படும் அல்லவா உன் மார்பிலே ஒளியவா…

—BGM—


Notes : Thappu Thanda Song Lyrics in Tamil. This Song from Villain (2002). Song Lyrics penned by Vairamuthu. தப்புத்தண்டா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading