தைமாசம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா.விஜய்ஷங்கர் மகாதேவன் & அனுராதா ஸ்ரீராம்வித்யாசாகர்மஜா

Thai Maasam Song Lyrics in Tamil


பெண் : மண்ணை நம்பி மழைய நம்பி…
உயிர போல பயிர நம்பி…
மண்ணுக்குள்ள பொன் விளைய…
மகமாயி உன்ன நம்பி…
வேர்வையில பாத்தி கட்டி…
விதைச்சிருக்கோம் தாயி…

—BGM—

ஆண் : ஐயாரெட்டு நாட்டு கட்டு… ஹேய்…
அய்யாவோடு கூத்து கட்டு… ஹேய்…

ஆண் : ஐயாரெட்டு நாத்து கட்டு…
அய்யாவோடு கூத்து கட்டு…
யானை கட்டி ஏறு பூட்டு…
வாய்க்கால் வெட்டி பாட்டு கட்டு…

ஆண் : பம்பரமா சுத்தி கிட்டு…
பகல் எல்லாம் பாடு பட்டா…
விளைஞ்சதெல்லாம் வீடு வரும் செல்லமே…

ஆண் : என் செல்லமே செல்லமே…
என் தங்கமே தங்கமே…
என் செல்லமே செல்லமே…
என் தங்கமே தங்கமே…

பெண் : ஏய்… தைமாசம் ஊர கூட்டு…
தஞ்சாவூரு மேளம் கொட்டு…
பூ வாழ பந்தலுக்கு…
புது பொண்ணா வெக்கபட்டு…

பெண் : கட்டி பாரு கூர பட்டு…
கழுத்துல நீ தாலி கட்டு…
ஓடி வாரேன் வுட்டு…
விட்டு மச்சானே…

பெண் : ஏய் மச்சானே மச்சானே…
ஆச வச்சேனே வச்சேனே…
ஹோய்… மச்சானே மச்சானே…
ஆச வச்சேனே வச்சேனே…

—BGM—

பெண் : தோளு மேல கலப்ப…
நீ தூக்கிகிட்டு நடப்ப…
ஆளு யாரும் பாக்கலைன்னா…
அங்கே இங்கே இடிப்ப…

—BGM—

ஆண் : ஹேய்… பத்திகிட்ட நெருப்ப…
நீ பல்ல காட்டி இளிப்ப…
உத்து நானும் பாத்து புட்டா…
நீ பத்து முறை குளிப்ப…

—BGM—

பெண் : ஏய்… வால கொஞ்சம் சுருட்டிகிட்டு…
உழுது போடய்யா…
உன் பட்டினத்தார் கோவனத்த…
பழுது பாரய்யா…

ஆண் : ஏய்… சக்கபோடு போட போறேன்…
யாரும் இல்லடி…
ஒரு சாக்கு போக்கு சொல்லி புட்டு…
ஓடி வாயேன்டி…

—BGM—

ஆண் : ஐயாரெட்டு நாட்டு கட்டு…
அய்யாவோடு கூத்து கட்டு…
யானை கட்டி ஏறு பூட்டு…
வாய்க்கால் வெட்டி பாட்டு கட்டு…

ஆண் : பம்பரமா சுத்தி கிட்டு…
பகல் எல்லாம் பாடு பட்டா…
விளைஞ்சதெல்லாம் வீடு வரும் செல்லமே…

ஆண் : என் செல்லமே செல்லமே…
குழு : ஏ… தைய்யாரே தைய்யாரே…
ஆண் : என் செல்லமே செல்லமே…
குழு : ஏ… தைய்யாரே தைய்யாரே…

—BGM—

ஆண் : ஏய்… முட்டி தெரிய சேலை…
நீ தூக்கி கட்டுற வேளை…
நான் கண்ணு முழுச்சி காத்திருப்பேன்…
கயித்து கட்டில் மேல…

—BGM—

பெண் : ஏடாகூட பொறப்பே…
உனக்கு ஏறி போச்சு கொழுப்பே…
நீ மாசத்தில மூணு நாளு…
எங்கே போய் படுப்ப…

—BGM—

ஆண் : நாலு முழ வேட்டி இப்ப…
நழுவ பாக்குது…
என் பத்து விரல் பத்தினிய…
தழுவ பாக்குது…

பெண் : காஞ்ச மாடு கம்பகத்தை…
மேய பாக்குது…
இந்த கன்னி பொண்ணு…
தோப்பு இப்போ காவல் கேட்குது…

—BGM—

ஆண் : ஏய் தைமாசம் ஊர கூட்டு…
பெண் : தஞ்சாவூரு மேளம் கட்டு…
ஆண் : பூ வாழ பந்தலுக்கு…
பெண் : புது பொண்ணா வெக்கபட்டு…

ஆண் : கட்டி பாரு கூர பட்டு…
பெண் : கழுத்துல நீ தாலி கட்டு…
ஆண் : ஓடி வாடி வுட்டு செல்லமே…

ஆண் : என் செல்லமே செல்லமே…
பெண் : ஆசை மச்சானே மச்சானே…
ஆண் : என் செல்லமே செல்லமே…
பெண் : ஆசை மச்சானே மச்சானே…


Notes : Thai Maasam Song Lyrics in Tamil. This Song from Majaa (2005). Song Lyrics penned by Pa. Vijay. தைமாசம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading