தாயே தாயே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசித் ஸ்ரீராம்பி. அஜனீஷ் லோக்நாத்மகாராஜா

Thaaye Thaaye Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : தாயே தாயே மகளென வந்தாய்…
தந்தை சிந்தை நலமுற வந்தாய்…
நீயே லோகம் என்று ஆனாய் பெண்ணே…
என்னை ஆளும் தெய்வம் நீதான் கண்ணே…
பெற்றது நானா இல்லை உன் மகனே நான் அம்மா…

ஆண் : தாயே தாயே மகளென வந்தாய்…
தந்தை சிந்தை நலமுற வந்தாய்…

—BGM—

ஆண் : திரு செல்வியே என் தேசம் நீயடி…
திசை காட்டிடும் சுட்டு விரலும் நீயடி…
வைத்தாலும் இசை நீயடி…
அடித்தாலும் மலரின் கொடி…
மகள் யாரும் இல்லாமல் வாழும் தந்தைக்கு…
உறவுகள் எல்லாம் ஊனமே…

ஆண் : தாயே தாயே மகளென வந்தாய்…
தந்தை சிந்தை நலமுற வந்தாய்…

—BGM—

ஆண் : பொருள் இல்லையே சிறு பொன்னும் இல்லையே…
பணம் காசிலே இந்த பாசம் இல்லையே…
அன்பான மகள் வந்தால் அம்பானி நான் ஆகிறேன்…
இந்த இன்ப மகாராஜா பெற்ற புது ரோஜா…
எலிசபெத் ராணியின் பேத்தியே…

ஆண் : தாயே தாயே மகளென வந்தாய்…
தந்தை சிந்தை நலமுற வந்தாய்…
நீயே லோகம் என்று ஆனாய் பெண்ணே…
என்னை ஆளும் தெய்வம் நீதான் கண்ணே…
பெற்றது நானா இல்லை உன் மகனே நான் அம்மா…

ஆண் : தாயே தாயே மகளென வந்தாய்…
தந்தை சிந்தை நலமுற வந்தாய்…


Notes : Thaaye Thaaye Song Lyrics in Tamil. This Song from Maharaja (2024). Song Lyrics penned by Vairamuthu. தாயே தாயே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading