தாஜ்மகால் ஒன்று

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கலை குமார்ஹரிஹரன்தேவாகண்ணோடு காண்பதெல்லாம்

Tajmahal Ondru Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : தாஜ்மகால் ஒன்று…
வந்து காதல் சொல்லியதே…

குழு : தரா ரரா தரா ரரா…

ஆண் : தங்க நிலா ஒன்று…
என் மனதை கிள்ளியதே…

குழு : தரா ரரா தரா ரரா…

ஆண் : தாஜ்மகால் ஒன்று…
வந்து காதல் சொல்லியதே…
தங்க நிலா ஒன்று…
என் மனதை கிள்ளியதே…

ஆண் : அந்த ஓசோன் தாண்டி வந்து…
ஒரு ஒலி துளி பேசியதே…
இனி எல்லாம் காதல் மயம்…
எனை கொன்றாய் இந்த யுகம்…

ஆண் : சித்திரை மாதம் மார்கழி ஆனது…
வா நீ வா…
என் அதிசய பூவே வா…
நீ வா நீ வா…
என் அழகிய தீவே வா…

ஆண் : தாஜ்மகால் ஒன்று…
வந்து காதல் சொல்லியதே…
தங்க நிலா ஒன்று…
என் மனதை கிள்ளியதே…

—BGM—

ஆண் : வீசி வரும் தென்றலை கிழித்து…
ஆடைகள் நெய்து தருவேனே…
பூத்து நிற்கும் பூக்களை செதுக்கி…
காலடி செய்து தருவேனே…

ஆண் : வானவில்லின் ஒரு நிறம் பிரித்து…
உதட்டுக்கு சாயம் தருவானே…
மின்னல் தரும் ஒளியினை உருக்கி…
வளையலும் செய்து தருவேனே…

ஆண் : என் இதயம் சிறகாச்சு…
என் இளமை நிஜமாச்சு…
என் இதயம் சிறகாச்சு…
என் இளமை நிஜமாச்சு…

ஆண் : நீ வா நீ வா…
என் அதிசய பூவே வா…
நீ வா நீ வா…
என் அழகிய தீவே வா…

ஆண் : தாஜ்மகால் ஒன்று…
வந்து காதல் சொல்லியதே…
தங்க நிலா ஒன்று…
என் மனதை கிள்ளியதே…

—BGM—

ஆண் : காற்றை பிடித்து வானத்தில் ஏறி…
நிலவை திறந்தேன் நீ தெரிந்தாய்…
மேகம் உடைத்து மெதுவாய் பார்த்தேன்…
துளியாய் அதிலே நீ தெரிந்தாய்…

ஆண் : புல்லை எரித்து சாம்பல் விதைத்தேன்…
பூவாய் அதிலே நீ முளைத்தாய்…
கடலை பிடித்து அலைகள் வடித்தேன்…
நுரைகள் முழுதும் நீ தெரிந்தாய்…

ஆண் : நீ கேட்டால் போதுமடி…
என் உயிரை பரிசளிப்பேன்…
நீ கேட்டால் போதுமடி…
என் உயிரை பரிசளிப்பேன்…

ஆண் : நீ வா நீ வா…
என் அதிசய பூவே வா…
நீ வா நீ வா…
என் அழகிய தீவே வா…

ஆண் : தாஜ்மகால் ஒன்று…
வந்து காதல் சொல்லியதே…
தங்க நிலா ஒன்று…
என் மனதை கிள்ளியதே…

ஆண் : அந்த ஓசோன் தாண்டி வந்து…
ஒரு ஒலி துளி பேசியதே…
இனி எல்லாம் காதல் மயம்…
எனை கொன்றாய் இந்த யுகம்…

ஆண் : சித்திரை மாதம் மார்கழி ஆனது…
வா நீ வா…
என் அதிசய பூவே வா…
நீ வா நீ வா…
என் அழகிய தீவே வா…

ஆண் : தாஜ்மகால் ஒன்று…
வந்து காதல் சொல்லியதே…
தங்க நிலா ஒன்று…
என் மனதை கிள்ளியதே…

—BGM—


Notes : Tajmahal Ondru Song Lyrics in Tamil. This Song from Kannodu Kanbathellam (1999). Song Lyrics penned by Kalai Kumar. தாஜ்மகால் ஒன்று பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading