| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| நா. முத்துக்குமார் | கார்த்திக் & கல்யாணி நாயர் | வித்யாசாகர் | தம்பி (2006) |
Summa Kidandha Song Lyrics in Tamil
—BGM—
பெண் : சும்மா கிடந்த சிட்டு குருவிக்கு…
சோளம் போட்டுபுட்டேன்…
அது கொண்டைய கொண்டைய ஆட்டி கிட்டு…
கொத்த வாரதென்ன…
பெண் : சுத்தி திரிஞ்ச பூனைகுட்டிக்கு…
சோத்த போட்டுபுட்டேன்…
அது வெள்ளி பானையில் பால குடிக்க…
துள்ளி வாரதென்ன…
—BGM—
ஆண் : சும்மா கிடந்த சிட்டு குருவிக்கு…
சோளம் போட்டுபுட்ட…
அது கொண்டைய ஆட்டி கொஞ்ச வந்தா…
குத்தம் சொல்வதென்ன… எட்டி போறதென்ன…
—BGM—
ஆண் : வெயிலும் அடிச்சு மழையும் பெஞ்சா…
நரிக்கும் நரிக்கும் கல்யாணம்…
எது அடிச்சு எது பெஞ்சா…
எனக்கும் உனக்கும் கல்யாணம்…
—BGM—
பெண் : பாக்கு கடிச்சு வெத்தல போட்டா…
பச்ச நாக்கு செவக்குமா…
எது கடிச்சு எது போட்டா…
எனக்கும் உனக்கும் செவக்குமா…
ஆண் : நெத்தி பொட்டுக்காரி நெருங்கி வா பக்கமா…
பெண் : சொட்ட வாலை மீனு உணவுக்கு சிக்குமா…
ஆண் : பசிக்குது கண்ணு பந்தி வச்சா குத்தமா…
பெண் : விரலில் எடுத்து குத்துவது தப்புமா…
—BGM—
பெண் : சும்மா கிடந்த சிட்டு குருவிக்கு…
சோளம் போட்டுபுட்டேன்…
ஆண் : அது கொண்டைய ஆட்டி கொஞ்ச வந்தா…
குத்தம் சொல்வதென்ன…
பெண் : கொத்த வாரதென்ன…
—BGM—
பெண் : கல்லில் சிலைய அடிச்சு முடிச்சா…
கடைசி வேலை கண் திறப்பு…
எது அடிச்சு எது முடிச்சா…
எனக்கும் உனக்கும் கடை திறப்பு…
—BGM—
ஆண் : உப்பில் உரசி மொளகா கடிச்சா…
உதட்டில் ஏறும் விறு விறுப்பு…
எது உரசி எது கடிச்சா…
எனக்கும் உனக்கும் சுறு சுறுப்பு…
பெண் : கள்ளிப்பட்டி காள கயித்தையே அக்குதே…
ஆண் : சேல கீழ பாத்தா சிலுப்பிதான் நிக்குது…
பெண் : வயசு பொண்ண கண்டா…
வளைச்சுத்தான் குத்துது…
ஆண் : குத்த வச்ச பொண்ணுதான்…
கொம்ப சீவி விட்டது…
—BGM—
ஆண் : சும்மா கிடந்த சிட்டு குருவிக்கு…
சோளம் போட்டுபுட்ட…
பெண் : அது கொண்டைய கொண்டைய ஆட்டி கிட்டு…
கொத்த வாரதென்ன…
ஆண் : சுத்தி திரிஞ்ச பூனைகுட்டிக்கு…
சோத்த போட்டுபுட்ட…
பெண் : அது வெள்ளி பானையில் பால குடிக்க…
துள்ளி வாரதென்ன…
—BGM—
Notes : Summa Kidandha Song Lyrics in Tamil. This Song from Thambi (2006). Song Lyrics penned by Na. Muthukumar. சும்மா கிடந்த பாடல் வரிகள்.
