சொர்க்கத்தின் வாசற்படி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.ஜே. யேசுதாஸ் & கே.எஸ். சித்ராஇளையராஜாஉன்னை சொல்லி குற்றமில்லை

Sorgathin Vaasapadi Song Lyrics in Tamil

BGM

ஆண் : சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்…
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்…

ஆண் : பெண்ணல்ல நீ எனக்கு வண்ணக் களஞ்சியமே…
சின்ன மலர்க் கொடியே…
நெஞ்சில் சிந்தும் பனித் துளியே…

பெண் : சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்…
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : உன்னாலே உண்டாகும் ஞாபகங்கள்…
ஒன்றிரண்டு அல்லவே…

பெண் : ஒன்றுக்குள் ஒன்றான நீரலைகள்…
என்றும் இரண்டல்லவே…

ஆண் : சிற்றன்ன வாசலின் ஓவியமே…
சிந்தைக்குள் ஊறிய காவியமே…

பெண் : எங்கே நீ அங்கேதான் நானிருப்பேன்…
எப்போதும் நீயாடத் தோள் கொடுப்பேன்…

ஆண் : மோகத்தில் நான் படிக்கும் மாணிக்க வாசகமே
நான் சொல்லும் பாடலெல்லாம் நீ தந்த யாசகமே…

பெண் : சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்…
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்…

பெண் : பெண்ணல்ல நான் உனக்கு வண்ணக் களஞ்சியமே…
சிந்தும் பனித் துளியே…
என்னைச் சேரும் இளங்கிளியே…

ஆண் : சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்…

BGM

பெண் : உன்னாலே நான் கொண்ட காயங்களை…
முன்னும் பின்னும் அறிவேன்…

ஆண் : கண்ணாலே நீ செய்யும் மாயங்களை…
இன்றும் என்றும் அறிவேன்…

பெண் : மின்சாரம் போல் எனை தாக்குகிறாய்…
மஞ்சத்தை போர்க்களம் ஆக்குகிறாய்…

ஆண் : கண்ணே உன் கண்ணென்ன வேலினமோ…
கை தொட்டால் மெய் தொட்டால் மீட்டிடுமோ…

பெண் : கோட்டைக்குள் நீ புகுந்து வேட்டைகள் ஆடுகிறாய்…
நானிங்கு தோற்று விட்டேன் நீ என்னை ஆளுகிறாய்…

ஆண் : சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்…
பெண் : சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்…

ஆண் : பெண்ணல்ல நீ எனக்கு வண்ணக் களஞ்சியமே…
பெண் : சிந்தும் பனித் துளியே…
என்னைச் சேரும் இளங்கிளியே…

ஆண் : சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்…
பெண் : சொர்க்கத்தின் வாசற்படி…

Notes : Sorgathin Vaasapadi Song Lyrics in Tamil. This Song from Unnai Solli Kuttramillai (1990). Song Lyrics penned by Vaali. சொர்க்கத்தின் வாசற்படி பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading