கெட்டும் பட்டணம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஇளையராஜாஇளையராஜாஉன்னை சொல்லி குற்றமில்லை

Kettu Pattanam Song Lyrics in Tamil


ஆண் : கெட்டும் பட்டணம் போய்ச் சேரென்று…
சொன்னவன் நல்லவனா நான் அறியேன்…
கெட்டும் பட்டணம் போய்ச் சேரென்று…
சொன்னவன் நல்லவனா நான் அறியேன்…

ஆண் : காவேரி வாசம் விட்டு…
கூவத்தின் வாசம் கண்டேன்…
காவேரி வாசம் விட்டு…
கூவத்தின் வாசம் கண்டேன்…

ஆண் : என் கதை அம்மம்மம்மா…
உன் கிட்டச் சொல்லட்டுமா…

ஆண் : கெட்டும் பட்டணம் போய்…
கெட்டும் பட்டணம் போய்ச் சேரென்று…
சொன்னவன் நல்லவனா நான் அறியேன்…
கெட்டும் பட்டணம் போய்ச் சேரென்று…
சொன்னவன் நல்லவனா நான் அறியேன்…

BGM

ஆண் : தவறு நெருங்காமல் தடமும் புரளாமல்…
நெருப்பாய் நான் இருந்தேன்…
தரும நெறி காக்கும் மனிதர் பல பேர்க்கு…
செருப்பாய் நான் இருந்தேன்…

ஆண் : கடமை நடை போடும் காவல் துறையோடு…
துருப்பாய் நான் இருந்தேன்…
களவு புரிவோரை உளவு பார்க்கின்ற…
பொறுப்பாய் நான் இருந்தேன்…

ஆண் : நல்லது நடக்கலே பொதுவாக…
நிம்மதி கலைந்தது மெதுவாக…
இங்கொரு குடும்பமே பலியாக…
என் மனம் எனக்குத்தான் பகையாக…

ஆண் : போயாச்சு என் தூக்கங்கள்…
வேராச்சு என் நோக்கங்கள்…

ஆண் : என் கதை அம்மம்மம்மா…
உன் கிட்டச் சொல்லட்டுமா…

ஆண் : கெட்டும் பட்டணம் போய்…
கெட்டும் பட்டணம் போய்ச் சேரென்று…
சொன்னவன் நல்லவனா நான் அறியேன்…
கெட்டும் பட்டணம் போய்ச் சேரென்று…
சொன்னவன் நல்லவனா நான் அறியேன்…

BGM

ஆண் : நியாயம் அழிந்தாலும் நீதி இறந்தாலும்…
நமக்கேன் என்றிருந்தேன்…
நாட்டை எவனாலும் திருத்த முடியாது…
என நான் தெரிந்து கொண்டேன்…

ஆண் : விழிகள் இமை மூடி…
விளைந்த பல கோடி…
கனவில் வாழ்ந்திருந்தேன்…

ஆண் : நேற்று நிலை வேறு…
இன்று நிலை வேறு…
அடி நான் கண்டு கொண்டேன்…

ஆண் : எண்ணிய வழி எல்லாம் கால் போச்சு…
இப்படித் தானம்மா நாள் போச்சு…
அப்படி சூழ்நிலை உருவாச்சு…
நான் அதன் கைகளில் விழுந்தாச்சு…

ஆண் :வாழ்க்கைதான் முன் போல் இல்லை…
குற்றம்தான் என் மேல் இல்லை…

ஆண் : என் கதை அம்மம்மம்மா…
இன்னமும் சொல்லணுமா…

ஆண் : கெட்டும் பட்டணம் போய்…
கெட்டும் பட்டணம் போய்ச் சேரென்று…
சொன்னவன் நல்லவனா நான் அறியேன்…
கெட்டும் பட்டணம் போய்ச் சேரென்று…
சொன்னவன் நல்லவனா நான் அறியேன்…

ஆண் : காவேரி வாசம் விட்டு…
கூவத்தின் வாசம் கண்டேன்…
காவேரி வாசம் விட்டு…
கூவத்தின் வாசம் கண்டேன்…

ஆண் : என் கதை அம்மம்மம்மா…
இன்னமும் சொல்லனுமா…

ஆண் : கெட்டும் பட்டணம் போய்ச் சேரென்று…
சொன்னவன் நல்லவனா நான் அறியேன்…
கெட்டும் பட்டணம் போய்ச் சேரென்று…
சொன்னவன் நல்லவனா நான் அறியேன்…


Notes : Kettu Pattanam Song Lyrics in Tamil. This Song from Unnai Solli Kuttramillai (1990). Song Lyrics penned by Vaali. கெட்டும் பட்டணம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading