வான் நிலா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்எஸ்.பி. பாலசுப்ரமணியம்எம்.எஸ். விஸ்வநாதன்பட்டினப்பிரவேசம்

Vaan Nila Nila Alla Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : வான் நிலா நிலா அல்ல…
உன் வாலிபம் நிலா…
வான் நிலா நிலா அல்ல…
உன் வாலிபம் நிலா…

ஆண் : தேன் நிலா எனும் நிலா…
என் தேவியின் நிலா…
தேன் நிலா எனும் நிலா…
என் தேவியின் நிலா…

ஆண் : நீ இல்லாத நாள் எல்லாம்…
நான் தேய்ந்த வெண்ணிலா…

ஆண் : வான் நிலா நிலா அல்ல…
உன் வாலிபம் நிலா…
மான் இல்லாத ஊரிலே…
சாயல் கண்ணிலா…

ஆண் : மான் இல்லாத ஊரிலே…
சாயல் கண்ணிலா…
பூ இல்லாத மண்ணிலே…
ஜாடை பெண்ணிலா…

ஆண் : வான் நிலா நிலா அல்ல…
உன் வாலிபம் நிலா…

—BGM—

ஆண் : தெய்வம் கல்லிலா…
ஒரு தோகையின் சொல்லிலா…
தெய்வம் கல்லிலா…
ஒரு தோகையின் சொல்லிலா…

ஆண் : பொன்னிலா பொட்டிலா…
புன்னகை மொட்டிலா…
அவள் காட்டும் அன்பிலா…

ஆண் : இன்பம் கட்டிலா…
அவள் தேகம் கட்டிலா…
இன்பம் கட்டிலா…
அவள் தேகம் கட்டிலா…

ஆண் : தீதிலா காதலா ஊடலா கூடலா…
அவள் மீட்டும் பன்னிலா…

—BGM—

ஆண் : வான் நிலா நிலா அல்ல…
உன் வாலிபம் நிலா…

—BGM—

ஆண் : வாழ்க்கை வழியிலா…
ஒரு மங்கையின் ஒளியிலா…
வாழ்க்கை வழியிலா…
ஒரு மங்கையின் ஒளியிலா…

ஆண் : ஊரிலா நாட்டிலா…
ஆனந்தம் வீட்டிலா…
அவள் நெஞ்சின் ஏட்டிலா…

ஆண் : சொந்தம் இருளிலா…
ஒரு பூவையின் அருளிலா…
சொந்தம் இருளிலா…
ஒரு பூவையின் அருளிலா…

ஆண் : எண்ணிலா ஆசைகள்…
என்னிலா கொண்டது ஏன்…
அதைச் சொல்வாய் வெண்ணிலா…

—BGM—

ஆண் : வான் நிலா நிலா அல்ல…
உன் வாலிபம் நிலா…

ஆண் : தேன் நிலா எனும் நிலா…
என் தேவியின் நிலா…
நீ இல்லாத நாள் எல்லாம்…
நான் தேய்ந்த வெண்ணிலா…

ஆண் : வான் நிலா நிலா அல்ல…
உன் வாலிபம் நிலா…


Notes : Vaan Nila Nila Alla Song Lyrics in Tamil. This Song from Pattina Pravesam (1977). Song Lyrics penned by Kannadasan. வான் நிலா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading