ஊரெல்லாம் உன் பாட்டுதான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.ஜே. யேசுதாஸ்இளையராஜாஊரெல்லாம் உன் பாட்டு

Oorellam Un Paatuthan Song Lyrics in Tamil

BGM

ஆண் : ஊரெல்லாம் உன் பாட்டுதான் உள்ளத்தை மீட்டுது…
நாளெல்லாம் உன் பார்வைதான் இன்பத்தைக் கூட்டுது…
நீயல்லால் தெய்வம் வேறெது…
நீயெனை சேரும் நாள் எது… ஓஹோ…

ஆண் : ஊரெல்லாம் உன் பாட்டுதான் உள்ளத்தை மீட்டுது…
நாளெல்லாம் உன் பார்வைதான் இன்பத்தைக் கூட்டுது…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : உன் பெயர் உச்சரிக்கும்…
உள்ளம் நித்தமும் தத்தளிக்கும்…
இங்கு நீ இல்லாது வாழ்வில் ஏது…
வேணிற்க் காலம்தான்…

ஆண் : என் மனம் உன் வசமே…
கண்ணில் என்றும் உன் சொப்பனமே…
விழி காணும் காட்சி யாவும்…
உந்தன் வண்ணக் கோலம்தான்…

ஆண் : ஆலம் விழுதுகள் போலே…
ஆடும் நினைவுகள் கோடி…
ஆடும் நினைவுகள் நாளும்…
பாடும் உனதருள் தேடி…

ஆண் : இந்தப் பிறப்பிலும் எந்தப் பிறப்பிலும்…
எந்தன் உயிர் உனைச் சேரும்…

ஆண் : ஊரெல்லாம் உன் பாட்டுதான் உள்ளத்தை மீட்டுது…
நாளெல்லாம் உன் பார்வைதான் இன்பத்தைக் கூட்டுது…

BGM

ஆண் : சென்றது கண்ணுறக்கம்…
நெஞ்சில் நின்றது உன் மயக்கம்…
இங்கு ஓய்வதேது தேய்வதேது உந்தன் ஞாபகம்…

ஆண் : உன்னிடம் சொல்வதற்கு…
எண்ணம் ஒன்றல்ல நூறிருக்கு…
அதை நீயும் கேட்க நானும் சொல்ல ஏது வாசகம்…

ஆண் : பாதச் சுவடுகள் போகும்…
பாதை அறிந்திங்கு நானும்…
கூட வருகின்ற போதும்…
கூட மறுப்பதோ நீயும்…

ஆண் : உள்ளக் கதவினை மெல்லத் திறந்திங்கு…
நெஞ்சில் இடம் தர வேண்டும்…

ஆண் : ஊரெல்லாம் உன் பாட்டுதான் உள்ளத்தை மீட்டுது…
நாளெல்லாம் உன் பார்வைதான் இன்பத்தைக் கூட்டுது…
நீயல்லால் தெய்வம் வேறெது…
நீயெனை சேரும் நாள் எது… ஓஹோ…

ஆண் : ஊரெல்லாம் உன் பாட்டுதான் உள்ளத்தை மீட்டுது…
நாளெல்லாம் உன் பார்வைதான் இன்பத்தைக் கூட்டுது…

Notes : Oorellam Un Paatuthan Song Lyrics in Tamil. This Song from Oorellam Un Paattu (1991). Song Lyrics penned by Vaali. ஊரெல்லாம் உன் பாட்டுதான் பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading