சொன்னால்தானே தெரியும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ்.பி. சைலஜாஎம்.எஸ்.விஸ்வநாதன்ராணுவவீரன்

Sonalthane Theriyum Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : சொன்னால்தானே தெரியும்…
என்னை கண்ணால் பாரு புரியும்…
அழகி உனக்கு கோபம் எதற்கு…
ஆசை அதிகம் நெஞ்சில் இருக்கு…

ஆண் : சொன்னால் தானே தெரியும்…
என்னை கண்ணால் பாரு புரியும்…
அழகி உனக்கு கோபம் எதற்கு…
ஆசை அதிகம் நெஞ்சில் இருக்கு…

—BGM—

பெண் : மான்விழி தங்கை மணமகளாக…
மாப்பிள்ளை பார்த்தாயே…
தேன்மொழி மங்கை திருமணம் காண…
சிந்தையில் மறந்தாயே…

பெண் : மான்விழி தங்கை மணமகளாக…
மாப்பிள்ளை பார்த்தாயே…
தேன்மொழி மங்கை திருமணம் காண…
சிந்தையில் மறந்தாயே…
சிந்தையில் மறந்தாயே…

ஆண் : பூமழை வான் மேகம் பூமியை மறக்காது…
பூமழை வான் மேகம் பூமியை மறக்காது…
காலங்கள் கனிந்தாலே இன்பமும் மலர்ந்திடும் தெரியாதோ…
இன்பமும் மலர்ந்திடும் தெரியாதோ…

பெண் : கண்ணா உன்னை தெரியும்…
உன் காதல் வேஷம் புரியும்…
உனது சிரிப்பு மனதில் துடிப்பு…
இன்று அறிந்தேன் உந்தன் நடிப்பு…

—BGM—

பெண் : கோழியுமிங்கே சேவலுமிங்கே…
குடும்பத்தை பாரிங்கே…
ஜோடிகளின்றி பறவைகள் கூட…
வாழ்வதுதான் எங்கே…

பெண் : கோழியுமிங்கே சேவலுமிங்கே…
குடும்பத்தை பாரிங்கே…
ஜோடிகளின்றி பறவைகள் கூட…
வாழ்வது தான் எங்கே…
வாழ்வது தான் எங்கே…

ஆண் : பறவையின் நிலை வேறு…
மனிதனின் கதை வேறு…
பறவையின் நிலை வேறு…
மனிதனின் கதை வேறு…

ஆண் : மனிதர்களினம் போலே…
பறவைகள் கடமையை அறியாது…
பறவைகள் கடமையை அறியாது…

ஆண் : சொன்னால்தானே தெரியும்…
என்னை கண்ணால் பாரு புரியும்…

—BGM—

ஆண் : நதியினில் வெள்ளம் வருகிற போது…
நாணலை நீ பாரு…
நாணலை போலே வாழவும் தெரிந்தால்…
வாழ்க்கையில் துயரேது…
வாழ்க்கையில் துயரேது…

பெண் : நாணலும் நானில்லை நானொரு பெண்பிள்ளை…
வாலிபம் போனாலே வாழ்க்கையில் வசந்தமும் வாராது…
வாழ்க்கையில் வசந்தமும் வாராது

ஆண் : சொன்னால்தானே தெரியும்…
என்னை கண்ணால் பாரு புரியும்…
அழகி உனக்கு கோபம் எதற்கு…
ஆசை அதிகம் நெஞ்சில் இருக்கு…


Notes : Sonalthane Theriyum Song Lyrics in Tamil. This Song from Raanuva Veeran (1981). Song Lyrics penned by Pulamaipithan. சொன்னால்தானே தெரியும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading