சொல்லடி அபிராமி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம். சௌந்தரராஜன்கே.வி. மகாதேவன்ஆதி பராசக்தி

Solladi Abirami Song Lyrics in Tamil


ஆண் : மணியே மணியின் ஒளியே…
ஒளிரும் அணிபுனைந்த வணியே…
அதும் அணிகலகே அணுகாதவர்க்கு பிணியே…
பிணிக்கு மருந்தே அமரர் பெரும் விருந்தே…
பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்த பின்னே…

ஆண் : சொல்லடி அபிராமி சொல்லடி அபிராமி…
வானில் சுடர் வருமோ எனக்கு இடர் வருமோ…
பதில் சொல்லடி அபிராமி…
வானில் சுடர் வருமோ எனக்கு இடர் வருமோ…
பதில் சொல்லடி அபிராமி…

BGM

ஆண் : நில்லடி முன்னாலே நில்லடி முன்னாலே…
முழு நிலவினை காட்டு உன் கண்ணாலே…

ஆண் : சொல்லடி அபிராமி…

BGM

ஆண் : பல்லுயிரும் படைத்த பரமனுக்கே…
சக்தி படைத்ததெல்லாம் உந்தன் செயல் அல்லவோ…
பல்லுயிரும் படைத்த பரமனுக்கே…
சக்தி படைத்ததெல்லாம் உந்தன் செயல் அல்லவோ…

ஆண் : நீ சொல்லுக்கெல்லாம் சிறந்த சொல் அல்லவோ…
நீ சொல்லுக்கெல்லாம் சிறந்த சொல் அல்லவோ…
இந்த சோதனை எனக்கல்ல உனக்கல்லவோ…

ஆண் : சொல்லடி அபிராமி…

BGM

ஆண் : வாராயோ ஒரு பதில் கூறாயோ…
நிலவென பாராயோ அருள் மழை தாராயோ…
வாராயோ ஒரு பதில் கூறாயோ…
நிலவென பாராயோ அருள் மழை தாராயோ…

ஆண் : வானம் இடிபடவும் பூமி பொடிபடவும்…
நடுவில் நின்றாடும் வடிவழகே…
கொடிகள் ஆட முடிகள் ஆட…
புடி பட எழுந்து ஆடும் கலை அழகே…

ஆண் : பிள்ளை உள்ளம் துள்ளும் வண்ணம் தேவி நீ…
கொட்டி வரும் மத்தளமும் சத்தமிட…

ஆண் : வாராயோ ஒரு பதில் கூறாயோ…
நிலவென பாராயோ அருள் மழை தாராயோ…

BGM

ஆண் : செங்கையில் வண்டுகளின் களின் என்று…
ஜெயம் ஜெயம் என்றாட…
இடை சங்கதம் என்று சிலம்பு புலம்போடு…
தண்டை கலந்தாட…
இரு கொங்கை கொடும் பகை என்றென்ன மென்று…
குலைந்து குலைந்தாட…

ஆண் : மலர் பங்கயமே உன்னை பாடிய பிள்ளை…
நிலாவும் எழுந்தாட…
விரைந்து வாராயோ எழுந்து வாராயோ…
கனிந்து வாராயோ…

BGM

ஆண் : காளி பயங்காரி சூலி மதங்கனி…
கண்களில் தெரிகின்றாள்…
கண்கள் சிவந்திடும் வண்ணம் எழுந்தொரு…
காட்சியை தருகின்றாள்…

ஆண் : வாடிய மகன் இவன் வாழிய என்று…
ஒரு வாழ்த்தும் சொல்கின்றாள்…
வானகம் வையகம் எங்கணுமே…
ஒரு வடிவாய் தெரிகின்றாள்…
எழில் வடிவாய் தெரிகின்றாள்…

ஆண் : அன்னை தெரிகின்றாள்…
என் அம்மை தெரிகின்றாள்…
அன்னை தெரிகின்றாள்…
என் அம்மை தெரிகின்றாள்…

ஆண் : ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்…

BGM


Notes : Solladi Abirami Song Lyrics in Tamil. This Song from Aathi Parasakthi (1971). Song Lyrics penned by Kannadasan. சொல்லடி அபிராமி பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top