சொல்பேச்சு கேட்காத

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்கே.எஸ். சித்ரா, ஸ்ரேயா கோஷல் & யுவன் ஷங்கர் ராஜாயுவன் ஷங்கர் ராஜாதில்லாலங்கடி

Sol Pechu Song Lyrics in Tamil


—BGM—

பெண் : சுந்தரியே… துள்ளுறியே…
சுந்தரியே… துள்ளுறியே…

—BGM—

பெண் : சுந்தரியே… துள்ளுறியே…

பெண் : சொல்பேச்சு கேட்காத சுந்தரியே…
நீயும்தான் நிற்காமல் துள்ளுறியே…
நீயாகப் பொய் பேசப் போகுறியே…
மின்சாரம் மேலே போய் மோதுறியே…

பெண் : ஏமாந்துப் போவாதே ஏமாத்திப்போவாதே…
அழகான ஆபத்தில் மாட்டிக்கொள்ள போகாதே…
கண்மூடி ஏங்காதே கீழ்ப்பாக்கம் போகாதே…
கேட்டுக்கோ அவந்தான் தில்லாலங்கடி…

பெண் : அவன் நல்ல பையன்தானா…
இல்லக் கெட்ட பையன்தானா…
தெரியலையே புரியலையே மெல்ல ஏதோ ஆனேன்…

பெண் : அவன் பேச்சில் சொக்கிப்பேனேன்…
இரு கண்ணில் சிக்கிப்போனேன்…
பிடிச்சிருக்கா பிடிக்கலையா யாரைக் கேக்கப்போவேன்…

பெண் : சொல்பேச்சு கேட்காத சுந்தரியே…
நீயும்தான் நிற்காமல் துள்ளுறியே…
நீயாக பொய் பேசப் போகுறியே…
மின்சாரம் மேலே போய் மோதுறியே…

—BGM—

ஆண் : அடிப்பெண்ணே கொஞ்ச நாளாய்…
கொஞ்ச நாளாய் கோபம் என்ன…
நடந்தால் உன் கால்கள் மிதக்குதா…
நெறுப்பாக எந்தன் காதல் அறியுதா…

ஆண் : இது என்ன காதலாலே…
கூடுவிட்டுப் பாய்கிறாயே…
விழியோடு என் உருவம் தெரியுதா…
புதிதாக ஒரு உலகம் விரியுதா…

பெண் : பயம் பயம் அதை அறியாமல் செல்வான் அவன்…
ஜெயம் ஜெயம் என்று தினம் தினம் வெல்பானவன்…
அழகான கள்ளனோ அன்பான வில்லனோ…
அதனாலே காதல் ஏக்கம் கொண்டாயோ…

பெண் : எப்போதும் இல்லாது சந்தோஷம் தந்தானே…
ஐயய்யோ ஆதிமூலம் தந்தாயோ…
ஏமாந்து போகாதே ஏமாத்தி போகாதே…
கண்மூடிக் கண்டேனே சடுகுடு ஆடாதே…

பெண் : சொல்பேச்சு கேட்காத சுந்தரியே…
நீயும்தான் நிற்காமல் துள்ளுறியே…

—BGM—

பெண் : அங்கும் இங்கும் எங்கேப்பார்க்கும் போதும்…
அவன் பூமுகம்…
நெஞ்சை அள்ளித் தூக்கிக்கொண்டுப் போகும்…
அவன் ஞாபகம்…

பெண் : காத்தாடிப் போலத்தான் கண் முன்னேப் பறப்பானே…
பெண்ணே நீ நூல் விட்டுப்போகாதே…
கண்ணாடி நான் பார்த்தால் முன்னாடி வந்தானே…
உனக்கிந்த காதல் சுகம் புரியாதே…

பெண் : ஏமாந்து போனேனே ஏமாத்தி போனாயே…
உன்னாலே உன்னாலே காதல் சுகம் கண்டேனே…

—BGM—

பெண் : என் பேச்ச கேட்காத சுந்தரியே…
உன் பேச்ச நான் கேட்க தூண்டுறியே…
என் பேச்ச கேட்காத சுந்தரியே…
உன் பேச்ச நான் கேட்க தூண்டுறியே…

—BGM—

பெண் : என் பேச்ச கேட்காத சுந்தரியே…


Notes : Sol Pechu Song Lyrics in Tamil. This Song from Thillalangadi (2010). Song Lyrics penned by Na. Muthukumar. சொல்பேச்சு கேட்காத பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading