சிவா சிவாய போற்றியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிவைக்கம் விஜயலட்சுமி & மரகதமணிஎம். எம். கீரவாணிபாகுபலி

Siva Sivaya Potri Song Lyrics in Tamil


—BGM—

குழு : சிவா சிவாய போற்றியே…
நமச்சிவாய போற்றியே…
பிறப்பறுக்கும் ஏகனே…
பொறுத்தருள் அநேகனே…

குழு : பரம்பொருள் உன் நாமத்தை…
கரங்குவித்துப் பாடினோம்…
இறப்பிலி உன் கால்களை…
சிரங்குவித்து தேடினோம்…

பெண் : யாரு இவன் யாரு இவன்…
கல்லத் தூக்கிப் போறானே…
புள்ள போல தோளு மேல…
உன்னத் தூக்கிப் போறானே…

பெண் : கண்ணு ரெண்டு போதல…
கையு காலு ஓடல…
கங்கையத்தான் தேடிகிட்டு…
தன்னத்தானே சுமந்துகிட்டு…
லிங்கம் நடந்து போகுதே…

—BGM—

ஆண் : எல்லையில்லாத ஆதியே…
எல்லாமுணா்ந்த ஜோதியே…
மலைமகள் உன் பாதியே…
கலைமகள் உன் கைதியே…

ஆண் : அருள்வல்லான் எம் அற்புதன்…
அரும்பொருள் எம் அா்ச்சிதன்…
உமை விரும்பும் உத்தமன்…
உருவிலா எம் உருத்திரன்…

குழு : ஒளிா்விடும் எம் தேசனே…
குளிா்மலை தன் வாசனே…
எழில்மிகு எம் நேசனே…
அழித்தொழிக்கும் ஈசனே…

—BGM—

குழு : நில்லாமல் ஆடும் பந்தமே…
கல்லாகி நிற்கும் உந்தமே…
கல்லா எங்கட்கு சொந்தமே…
எல்லா உயிா்க்கும் அந்தமே…

—BGM—


Notes : Siva Sivaya Potri Song Lyrics in Tamil. This Song from Baahubali (2015). Song Lyrics penned by Madhan Karky. சிவா சிவாய போற்றியே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading