பரமசிவன் கழுத்தில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம்.சௌந்தரராஜன்எம்.எஸ்.விஸ்வநாதன்சூரியகாந்தி

Paramasivan Kazhuthil Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பரமசிவன் கழுத்தில் இருந்து…
பாம்பு கேட்டது…
கருடா சௌக்கியமா…

—BGM—

ஆண் : பரமசிவன் கழுத்தில் இருந்து…
பாம்பு கேட்டது…
கருடா சௌக்கியமா…

ஆண் : யாரும் இருக்கும் இடத்தில்…
இருந்து கொண்டால்…
எல்லாம் சௌக்கியமே…
கருடன் சொன்னது…
அதில் அர்த்தமும் உள்ளது…

—BGM—

ஆண் : உயர்ந்த இடத்தில் இருக்கும்போது…
உலகம் உன்னை மதிக்கும்…
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்…
நிழலும் கூட மிதிக்கும்…

ஆண் : உயர்ந்த இடத்தில் இருக்கும்போது…
உலகம் உன்னை மதிக்கும்…
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்…
நிழலும் கூட மிதிக்கும்…

ஆண் : மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று…
மானமுள்ள மனிதருக்கு ஔவை சொன்னது…
அது ஔவை சொன்னது…
அதில் அர்த்தம் உள்ளது…

ஆண் : பரமசிவன் கழுத்தில் இருந்து…
பாம்பு கேட்டது…
கருடா சௌக்கியமா…

ஆண் : யாரும் இருக்கும் இடத்தில்…
இருந்து கொண்டால்…
எல்லாம் சௌக்கியமே…
கருடன் சொன்னது…
அதில் அர்த்தமும் உள்ளது…

—BGM—

ஆண் : வண்டி ஓட சக்கரங்கள்…
இரண்டு மட்டும் வேண்டும்…
அந்த இரண்டில் ஒன்று சிறியதென்றால்…
எந்த வண்டி ஓடும்…

ஆண் : உனைப்போலே அளவோடு…
உறவாட வேண்டும்…
உயர்ந்தோரும் தாழ்ந்தோறும்…
உறவு கொள்வது…

ஆண் : அது சிறுமை என்பது…
அதில் அர்த்தம் உள்ளது…

ஆண் : பரமசிவன் கழுத்தில் இருந்து…
பாம்பு கேட்டது…
கருடா சௌக்கியமா…

ஆண் : யாரும் இருக்கும் இடத்தில்…
இருந்து கொண்டால்…
எல்லாம் சௌக்கியமே…
கருடன் சொன்னது…
அதில் அர்த்தமும் உள்ளது…

—BGM—

ஆண் : நீயும் நானும் சேர்ந்திருந்தோம்…
நிலவும் வானும் போலே…
நான் நிலவு போல தேய்ந்து வந்தேன்…
நீ வளர்ந்ததாலே…

ஆண் : நீயும் நானும் சேர்ந்திருந்தோம்…
நிலவும் வானும் போலே…
நான் நிலவு போல தேய்ந்து வந்தேன்…
நீ வளர்ந்ததாலே…

ஆண் : என்னுள்ளம் எனைப்பார்த்து…
கேலி செய்யும் போது…
இல்லாதான் இல்வாழ்வில்…
நிம்மதி ஏது…

ஆண் : இது கணவன் சொன்னது…
இதில் அர்த்தம் உள்ளது…

ஆண் : பரமசிவன் கழுத்தில் இருந்து…
பாம்பு கேட்டது…
கருடா சௌக்கியமா…

ஆண் : யாரும் இருக்கும் இடத்தில்…
இருந்து கொண்டால்…
எல்லாம் சௌக்கியமே…
கருடன் சொன்னது…
அதில் அர்த்தமும் உள்ளது…


Notes : Paramasivan Kazhuthil Song Lyrics in Tamil. This Song from Suryagandhi (1973). Song Lyrics penned by Kannadasan. பரமசிவன் கழுத்தில் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading