சிறு தொடுதலிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிபாம்பே ஜெயஸ்ரீ & ஹரிசரண்தரன்குமார்லாடம்

Siru Thoduthalilae Song Lyrics in Tamil


பெண் : சிறு தொடுதலிலே சின்ன சின்னதாய்…
சிறகுகள் பூக்க…
வரும் இரவுகளில் இன்னும் இன்னும்…
நான் கேட்க…

ஆண் : இது வரையிலும் நான் எண்ணவில்லையே…
இனிமையை வாங்க…
சில நொடிகளிலே உந்தன் அன்பிலே நான்…

—BGM—

ஆண் : எனக்கே என்னை தெரியாமல்…
இருந்தேன் அன்பே எதற்காக…
சிரிப்பால் உலகை கொடுத்தாயே…
இரண்டாம் தாய் போல் கிடைத்தாயே…

பெண் : நான் உனக்கென இருப்பது தெரியாதா…
எதை நான் சொல்வேன் பதிலாக…
இனிப்பாய் என்னை நீ கவர்ந்தாயே…
இயல்பாய் மனதை திறந்தாயே…

ஆண் : ஒரு முறை காதல் இரு முறை மோதல்…
பல முறை சாதல் வாழ்க்கையிலே…

பெண் : ஒரு முறை கூடல் பல முறை தேடல்…
நெருக்கத்திலே…

ஆண் : ஒரு முறை காதல் இரு முறை மோதல்…
பல முறை சாதல் வாழ்க்கையிலே…

—BGM—

ஆண் : அலையே இல்லா கடல் போல…
இருந்தேன் அன்பே எதற்காக…
கிடைத்தாய் கரையாய் நடந்தேனே…
கிழக்காய் உதித்தாய் உடைந்தேனே…

பெண் : மழையே இல்லா நிலம் போல…
பொறுத்தேன் அன்பே உனக்காக…
கொடுத்தாய் உன்னை நீ முழுதாக…
எடுத்தாய் எனையும் அழகாக…

ஆண் : எது வரை நீயோ அது வரை நானோ…
இது வரை ஆசை காதலிலே…

பெண் : எது வரை காதல் அது வரை காமம் பூமியிலே…

ஆண் : எது வரை நீயோ அது வரை நானோ…
இது வரை ஆசை காதலிலே…

—BGM—

பெண் : சிறு தொடுதலிலே சின்ன சின்னதாய்…
சிறகுகள் பூக்க…
வரும் இரவுகளில் இன்னும் இன்னும்…
நான் கேட்க…

ஆண் : இது வரையிலும் நான் எண்ணவில்லையே…
இனிமையை வாங்க…
சில நொடிகளிலே உந்தன் அன்பிலே தேங்க…

—BGM—


Notes : Siru Thoduthalilae Song Lyrics in Tamil. This Song from Laadam (2009). Song Lyrics penned by Yugabharathi. சிறு தொடுதலிலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading