சிறு பொன்மணி அசையும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்இளையராஜா, மலேசியா வாசுதேவன் & எஸ்.ஜானகிஇளையராஜாகல்லுக்குள் ஈரம்

Siru Ponmani Asaiyum Song Lyrics in Tamil


BGM

பெண் : சிறு பொன்மணி அசையும்…
அதில் தெறிக்கும் புது இசையும்…
இரு கண்மணி பொன் இமைகளில் தாள லயம்…

BGM

பெண் : சிறு பொன்மணி அசையும்…
அதில் தெறிக்கும் புது இசையும்…
இரு கண்மணி பொன் இமைகளில் தாள லயம்…

பெண் : நிதமும் தொடரும் கனவும் நினைவும்…
இது மாறாது…
ராகம் தாளம் பாவம் போல…
நானும் நீயும் சேர வேண்டும்…

ஆண் : சிறு பொன்மணி அசையும்…
அதில் தெறிக்கும் புது இசையும்…
இரு கண்மணி பொன் இமைகளில் தாள லயம்…

BGM

பெண் : விழியில் சுகம் பொழியும்…
இதழ் மொழியில் சுவை வழியும்…
எழுதும் வரை எழுதும்…
இனி புலரும் பொழுதும்…

பெண் : விழியில் சுகம் பொழியும்…
இதழ் மொழியில் சுவை வழியும்…
எழுதும் வரை எழுதும்…
இனி புலரும் பொழுதும்…

பெண் : தெளியாதது எண்ணம் கலையாதது வண்ணம்…
தெளியாதது எண்ணம் கலையாதது வண்ணம்…
அழியாதது அடங்காதது அணை மீறிடும் உள்ளம்…

பெண் : வழி தேடுது…
விழி வாடுது…
கிளி பாடுது…
உன் நினைவினில்…

பெண் : சிறு பொன்மணி அசையும்…
அதில் தெறிக்கும் புது இசையும்…
இரு கண்மணி பொன் இமைகளில் தாள லயம்…

BGM

பெண் : நதியும் முழு மதியும்…
இரு இதயம்தனில் பதியும்…
ரதியும் அதன் பதியும்…
பெறும் சுகமே உதயம்…

பெண் : நதியும் முழு மதியும்…
இரு இதயம்தனில் பதியும்…
ரதியும் அதன் பதியும்…
பெறும் சுகமே உதயம்…

பெண் : விதை ஊன்றிய நெஞ்சம்…
விளைவானது மஞ்சம்…
விதை ஊன்றிய நெஞ்சம்…
விளைவானது மஞ்சம்…

பெண் : கரை பேசுது…
கவி பாடுது…
கலந்தால் சுகம் மிஞ்சும்…

ஆண் : உயிர் உன் வசம்…
உடல் என் வசம்…
பயிரானது உன் நினைவுகள்…

பெண் : சிறு பொன்மணி அசையும்…
அதில் தெறிக்கும் புது இசையும்…
ஆண் : இரு கண்மணி பொன் இமைகளில் தாள லயம்…

பெண் : நிதமும் தொடரும் கனவும் நினைவும்…
இது மாறாது…

ஆண் : ராகம் தாளம் பாவம் போல…
நானும் நீயும் சேர வேண்டும்…

பெண் : சிறு பொன்மணி அசையும்…
அதில் தெறிக்கும் புது இசையும்…
ஆண் : இரு கண்மணி பொன் இமைகளில் தாள லயம்…


Notes : Siru Ponmani Asaiyum Song Lyrics in Tamil. This Song from Kallukkul Eeram (1980). Song Lyrics penned by Gangai Amaran. சிறு பொன்மணி அசையும் பாடல் வரிகள்.


Scroll to Top