ரோஜா ஒன்று முத்தம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாகொம்பேறி மூக்கன்

Roja Ondru Mutham Song Lyrics in Tamil


BGM

ஆண் : ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்…
வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்…

பெண் : மயக்கத்தில் தோய்ந்து…
மடியின் மீது சாய்ந்து…

ஆண் : ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்…
வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்…

BGM

ஆண் : தங்க மேனி தழுவும்…
பட்டுச்சேலை நழுவும்…

பெண் : தென்றல் வந்து விளக்கும்…
அது உங்களோடு பழக்கம்…

ஆண் : சொர்க்கம் எங்கே என்றே தேடி…
வாசல் வந்தேன் மூடாதே…

பெண் : மேளம் கேட்கும் காலம் வந்தால்…
சொர்க்கம் உண்டு வாடாதே…

ஆண் : அல்லிப்பூவின் மகளே…
கன்னித்தேனை தா… ஹோ…

பெண் : ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்…
வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்…

ஆண் : மயக்கத்தில் தோய்ந்து…
மடியின் மீது சாய்ந்து…

ஆண் : ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்…
பெண் : வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்…

BGM

பெண் : வெண்ணிலாவில் விருந்து…
அங்கு போவோம் பறந்து…

ஆண் : விண்ணின் மீனை தொடுத்து…
சேலையாக உடுத்து…

பெண் : தேகம் கொஞ்சம் நோகும் என்று…
பூக்கள் எல்லாம் பாய் போட…

ஆண் : நம்மை பார்த்து காமன் தேசம்…
ஜன்னல் சாத்தி வாயூற…

பெண் : கன்னிக்கோயில் திறந்து…
பூஜை செய்ய வா… ஹோய்…

ஆண் : ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்…
வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்…

பெண் : மயக்கத்தில் தோய்ந்து…
மடியின் மீது சாய்ந்து…

பெண் : ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்…
ஆண் : வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்…


Notes : Roja Ondru Mutham Song Lyrics in Tamil. This Song from Komberi Mookan (1984). Song Lyrics penned by Vairamuthu. ரோஜா ஒன்று முத்தம் பாடல் வரிகள்.


Scroll to Top