எவனோ ஒருவன்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசுவர்ணலதாஏ.ஆர்.ரகுமான்அலைபாயுதே

Evano Oruvan Song Lyrics in Tamil


பெண் : எவனோ ஒருவன் வாசிக்கிறான்…
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்…
தவம் போல் இருந்து யோசிக்கிறேன்…
அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்…

BGM

பெண் : எவனோ ஒருவன் வாசிக்கிறான்…
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்…

பெண் : எவனோ ஒருவன் வாசிக்கிறான்…
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்…
தவம் போல் இருந்து யோசிக்கிறேன்…
அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்…

பெண் : கேட்டுக் கேட்டு நான் கிறங்குகிறேன்…
கேட்பது எவனோ அறியவில்லை…
காட்டு மூங்கிலின் காதுக்குள்ளே…
அவன் ஊதும் ரகசியம் புாியவில்லை…

பெண் : எவனோ ஒருவன் வாசிக்கிறான்…
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்…

BGM

பெண் : புல்லாங்குழலே பூங்குழலே…
நீயும் நானும் ஒரு ஜாதி…

BGM

பெண் : புல்லாங்குழலே பூங்குழலே…
நீயும் நானும் ஒரு ஜாதி…
உள்ளே உறங்கும் ஏக்கத்திலே…
உனக்கும் எனக்கும் சாிபாதி…

பெண் : கண்களை வருடும் தேனிசையில்…
என் காலம் கவலை மறந்திருப்பேன்…
இன்னிசை மட்டும் இல்லையென்றால்…
நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்…

பெண் : எவனோ ஒருவன் வாசிக்கிறான்…
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்…

BGM

பெண் : உறக்கம் இல்லா முன்னிரவில்…
என் உள்மனதில் ஒரு மாறுதலா…

BGM

பெண் : உறக்கம் இல்லா முன்னிரவில்…
என் உள்மனதில் ஒரு மாறுதலா…
இரக்கம் இல்லா இரவுகளில்…
இது எவனோ அனுப்பும் ஆறுதலா…

பெண் : எந்தன் சோகம் தீா்வதற்கு…
இதுபோல் மருந்து பிறிதில்லையே…
அந்தக் குழலை போல் அழுவதற்கு…
அத்தனை கண்கள் எனக்கில்லையே…

பெண் : எவனோ ஒருவன் வாசிக்கிறான்…
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்…
எவனோ ஒருவன் வாசிக்கிறான்…
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்…

BGM


Notes : Evano Oruvan Song Lyrics in Tamil. This Song from Alaipayuthey (2000). Song Lyrics penned by Vairamuthu. எவனோ ஒருவன் பாடல் வரிகள்.


Scroll to Top