சிலம்பாட்டம்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஷங்கர் மகாதேவன்யுவன் ஷங்கர் ராஜாசிலம்பாட்டம்

Silambattam Song Lyrics in Tamil


ஆண் : தமிழென்றால் நான் ஒரு தமிழன்டா…
எனக்கு பலம் என் ரசிகன்டா…
கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா…
என் வெற்றிக்கு காரணம் ஆண்டவன்டா…

BGM

ஆண் : ஹே… தமிழென்றால் நான் ஒரு தமிழன்டா…
எனக்கு பலம் என் ரசிகன்டா…
கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா…
என் வெற்றிக்கு காரணம் ஆண்டவன்டா…

ஆண் : தடை பல வென்றவன்டா…
தலைகனம் விட்டவன்டா…

ஆண் : தடை பல வென்றவன்டா…
தலைகனம் விட்டவன்டா…
தப்புதண்டா எப்பவுமே பண்ணாதவன்டா…

ஆண் : முக்குலமும் எக்குலமும்…
தெற்குதிசை மக்கள் எல்லாம்…
எப்போதும் என்னோடுதான்…

ஆண் : கூட்டம் கூட்டம் கூட்டம்…
இது தமிழுக்கு வருகிற கூட்டம்…
ஏ… ஆட்டம் ஆட்டம் ஆட்டம்…
சிலம்பரசனின் சிலம்பாட்டம்…

ஆண் : ஹே… கூட்டம் கூட்டம் கூட்டம்…
இது தமிழுக்கு வருகிற கூட்டம்…
ஏ… ஆட்டம் ஆட்டம் ஆட்டம்…
சிலம்பரசனின் சிலம்பாட்டம்…

BGM

குழு : சிலம்பாட்டம் பண்ணவே இதோடா இதோடா…
சிரிப்பழகு கள்ளரு இதோடா இதோடா…

BGM

குழு : புதிராட்டம் விளையாடும்…
கதிர்போல ஒளிவீசும்…
சீறும் சிறுத்தைப்போல பாயும்…
எங்கள் தங்க சிங்கமே…
சீறும் சிறுத்தைப்போல பாயும்…
எங்கள் தங்க சிங்கமே…

ஆண் : கிழக்கும் மேற்கும் பிரியும் கம்பப் பிடிச்சா…
வானும் மண்ணும் அதிரும் வீசி அடிச்சா…
விரலை சூப்பும் வயசில் புக்கைப் படிச்சேன்…
விவரம் தெரிஞ்ச பிறகு சொல்லி அடிச்சேன்…

ஆண் : நான் வம்புதும்பு சண்டைக்கெல்லாம்…
வர மாட்டேன்டா…
நீ வாய்க் கொழுப்பால் சவால் விட்டா…
விட மாட்டேன்டா…

ஆண் : அட சும்மா இருக்கும் சங்க இங்க ஊதாதீங்க…
இத ஊதிப்புட்டா தூள் பறக்கும் மோதாதீங்க…
கோடை வெயிலா கோபம் இருக்கும்…
வாகைக்குள்ள வாஞ்சி இருக்கும்…
ரெண்டும் உண்டு இங்கேதான்…

BGM

பெண் : ஏ… தன்னா நன்னானே… தன்னா நன்னானே…
தமிழப் பாடுங்கடி புடிச்சி ஆடுங்கடி…
தமிழு ஜெயிச்சதுன்னு மாலை போடுங்கடி…

பெண் : வீரமகன்தான் இவன் வித்தையெல்லாம் கத்தவன்…
சூரமகன் தான் மனம் சுத்தமான உத்தமன்…
அம்மாடி வாயேன்டி ஆரத்தி சுத்தேன்டி…
நம்மாளு நூறாண்டுதான் வாழ…

BGM

ஆண் : உறவு முறையே எனக்கு ஊரை நம்பித்தான்…
உலகத் தமிழன் எனக்கு அண்ணன் தம்பிதான்…
தகப்பன் இதைதான் எனக்கு சொல்லிக்கொடுத்தான்…
தனக்கு தெரிஞ்ச தமிழை அள்ளிக்கொடுத்தான்…

ஆண் : என்னை பெத்தவுங்க குற்றம்குறை சொன்னதில்ல…
அவங்க போட்டுவச்ச கோட்டைத் தாண்டி நின்னதில்ல…
நான் மத்தவங்க மதிக்கும்படி வாழும் பிள்ளை…
இந்த மண்ணுக்குள்ள வானத்த நான் விட்டதில்ல…

ஆண் : தமிழா தமிழா தலைய நிமிரு…
தமிழன் இவன்தான் ஏறும் திமிரு…
மண்ணின் மைந்தன் நாமதான்…

குழு : கூட்டம் கூட்டம் கூட்டம்…
இது நம்ம தமிழ் அரசனின் கூட்டம்…
ஆட்டம் ஆட்டம் ஆட்டம்…
சிலம்பரசனின் சிலம்பாட்டம்…

பெண் : கூட்டம் கூட்டம் கூட்டம்…
இது நம்ம தமிழ் அரசனின் கூட்டம்…
ஆட்டம் ஆட்டம் ஆட்டம்…
சிலம்பரசனின் சிலம்பாட்டம்…

ஆண் : ஹே… தமிழென்றால் நான் ஒரு தமிழன்டா…
எனக்கு பலம் என் ரசிகன்டா…
கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா…
என் வெற்றிக்கு காரணம் ஆண்டவன்டா…

ஆண் : தடை பல வென்றவன்டா…
தலைகனம் விட்டவன்டா…

ஆண் : தடை பல வென்றவன்டா…
தலைகனம் விட்டவன்டா
தப்புதண்டா எப்பவுமே பண்ணாதவன்டா…

ஆண் : முக்குலமும் எக்குலமும்…
தெற்குதிசை மக்கள் எல்லாம்…
எப்போதும் என்னோடுதான்…


Notes : Silambattam Song Lyrics in Tamil. This Song from Silambattam (2008). Song Lyrics penned by Vaali. சிலம்பாட்டம் பாடல் வரிகள்.


Scroll to Top