செவ்வரளி தோட்டத்திலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்உமா ரமணன் & இளையராஜாஇளையராஜாபகவதிபுரம் ரயில்வே கேட்

Sevvarali Thottathula Song Lyrics in Tamil


ஆண் : தானானே தனானா தானானா…

BGM

பெண் : செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு…
தேடிக்கிட்டு பாடுதய்யா இந்த மனசு…
அக்கம் பக்கம் யாருமில்லே ஆளுங்க அரவமில்ல…
சுத்தும் முத்தும் பாக்கயிலே துடிப்பும் அடங்குதில்ல…

பெண் : செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு…
தேடிக்கிட்டு பாடுதய்யா இந்த மனசு…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : கொட்டுகிற அருவியிலே குளிக்கிற குருவிகளே…
பட்டுடம்பு நனையையிலே பசிக்குது மனசினிலே…
பொன்னுடம்ப பாக்கயிலே போதையும் தீரவில்ல அன்னமே… ஏ…

பெண் : வெக்கமது உங்களுக்கில்ல…
வெக்கம் மறந்தா பொம்பள இல்ல…
ஆசைய சொல்ல நெனச்சேன் சொல்லாமத்தான்விட்டேனே…

ஆண் : செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு…
தேடிக்கிட்டு பாடுதம்மா இந்த மனசு…

BGM

ஆண் : ஐலேசா ஐலேசா…
குழு : ஹோயய்யா ஹோயய்யா…
ஆண் : ஐலேசா ஐலேசா…
குழு : ஹோயய்யா ஹோயய்யா…

ஆண் : ஆறும் அலை ஓயாதம்மா ஆசை அது தேயாதம்மா…
வாடப்பட்டு நின்னாளம்மா வாசம் பட்ட பூவாட்டம்…
மனசுல கொண்டாட்டம் மலருற செண்டாட்டம்…
ஆறும் அலை ஓயாதம்மா ஆசை அது தேயாதம்மா…

BGM

பெண் : ஒண்ணுக்கொண்ணு ஒறவிருந்தா…
நெஞ்சுக்கொரு சொகமிருக்கும்…
சொந்தத்திலே பலமிருந்தா…
சொர்க்கத்திலும் இடமிருக்கும்…
உன்னைவிட யாருமில்ல ஒட்டுறவு தேவையில்ல…
என்னய்யா… ஆ…

ஆண் : என்னமோ சொல்ல நெனச்சேன்…
என்ன தொட்டதும் சொல்ல மறந்தேன்…
என்ன என்ன எண்ணமிருக்கோ எல்லாத்திலும் நீதானே…

பெண் : செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு…
ஆண் : ஹான்…
பெண் : தேடிக்கிட்டு பாடுதய்யா இந்த மனசு…

ஆண் : அக்கம் பக்கம் யாருமில்லே ஆளுங்க அரவமில்ல…
சுத்தும் முத்தும் பாக்கயிலே துடிப்பும் அடங்குதில்ல…

ஆண் : செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு…
தேடிக்கிட்டு பாடுதய்யா இந்த மனசு…


Notes : Sevvarali Thottathula Song Lyrics in Tamil. This Song from Bhagavathipuram Railway Gate (1983). Song Lyrics penned by Gangai Amaran. செவ்வரளி தோட்டத்திலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading