செவ்வானம் சின்னப் பெண்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துமனோ & எஸ்.பி.பி.பல்லவிஏ.ஆர்.ரகுமான்பவித்ரா

Sevvaanam Chinna Pen Song Lyrics in Tamil


BGM

பெண் : செவ்வானம் சின்னப் பெண் சூடும்…
குங்குமம் ஆகாதோ…
விண்மீன்கள் கன்னிப் பெண் சூடும்…
மல்லிகை ஆகாதோ…

ஆண் : கண்ணால் உன்னை வரவேற்று…
பொன் கவிக் குயில் பாடாதோ…
கண்ணாளன் தோளில் இடம் கேட்டு…
என் வண்ணக்கிளி சாயாதோ…

பெண் : செவ்வானம்…
ஆண் : சின்னப் பெண் சூடும் குங்குமம் ஆகாதோ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : விண் மீன்கள்…
ஆண் : கன்னிப் பெண் சூடும் மல்லிகை ஆகாதோ…

BGM

ஆண் : பொன்னுடல் தன்னை என் கையில் ஏந்த…
என்னடி யோசிக்கிறாய்…

பெண் : மொத்தத்தில் காதலின் எடை என்னாகும்…
இப்படி சோதிக்கிறாய்…

ஆண் : நிலவை படைத்து முடித்த கையில்…
அந்த பிரம்மன் உன்னை படைத்துவிட்டான்…

பெண் : என்னை படைத்து முடித்த கையில்…
அவன் உன்னை இங்கு அனுப்பிவைத்தான்…

ஆண் : செவ்வானம் சின்னப் பெண் சூடும்…
குங்குமம் ஆகாதோ…

பெண் : விண் மீன்கள் கன்னிப் பெண் சூடும்…
மல்லிகை ஆகாதோ…

BGM

பெண் : செண்பகப் பூவின் மடல்களை திறந்து…
தென்றல் தேடுவதென்ன…

ஆண் : தென்றல் செய்த வேலையை சொல்லி…
என்னை பார்ப்பதென்ன…

பெண் : பார்வையின் ஜாடை புரியாமல்…
நீ பாட்டு பாடி ஆவதென்ன…

ஆண் : பல்லவி சரணம் முடிந்தவுடன்…
நாம் பங்குபெறும் காட்சியென்ன…

பெண் : செவ்வானம் சின்னப் பெண் சூடும்…
குங்குமம் ஆகாதோ…

பெண் : விண் மீன்கள் கன்னிப் பெண் சூடும்…
ஆண் : மல்லிகை ஆகாதோ…

பெண் : கண்ணால் உன்னை வரவேற்று…
பொன் கவிக் குயில் பாடாதோ…
ஹே கண்ணாளன் தோளில் இடம் கேட்டு…
என் வண்ணக்கிளி சாயாதோ…

பெண் : கண்ணால் உன்னை வரவேற்று…
பொன் கவிக் குயில் பாடாதோ…
கண்ணாளன் தோளில் இடம் கேட்டு…
என் வண்ணக்கிளி சாயாதோ…


Notes : Sevvaanam Chinna Pen Song Lyrics in Tamil. This Song from Pavithra (1994). Song Lyrics penned by Vairamuthu. செவ்வானம் சின்னப் பெண் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading