செம்பருத்திப் பூவுக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ். பி. பாலசுப்ரமணியம் & சுவர்ணலதாஇளையராஜாதர்மா

Sembaruthi Poovukku Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : செம்பருத்திப் பூவுக்கு சேலையொன்னு செல்லம்மா…
நானிருக்கேன் கட்டிக்கோ நாணமென்ன சொல்லம்மா…

—BGM—

ஆண் : பூங்காத்து நெருப்பாச்சு…
அது உள்ளுக்குள்ளே கொதிப்பாச்சு…
குத்தாலக் குயிலே துணை நீதானம்மா…
துணை நீதானம்மா…

பெண் : செம்பருத்திப் பூவுக்கு சேலையொன்னு தாரியா…
கை புடிச்சு அழகா கட்டி விட வாரியா…

—BGM—

ஆண் : வட்ட வட்ட நிலாவுக்கு பொட்டு வச்சு…
வஞ்சி வஞ்சி வந்தா நெஞ்ச தொட்டு வச்சு…

குழு : ஒத்துக்கிட்டா தப்பு என்ன…

ஆண் : கொஞ்சம் வெட்டி வெட்டி சிட்டு போகையிலே…
வச்ச வச்ச கண்ண ஊரு வாங்கலையே…

குழு : வசியம் பண்ணுது உம் மனசு…
மெல்ல வளைச்சு போடுது உன் சிரிப்பு…

பெண் : உம் பேர எழுதி ஒரு நூறு தரம் படிச்சேன்…
உம் பேர எழுதி ஒரு நூறு தரம் படிச்சேன்…
பாய் விரிக்கும் பொழுது உன் நெனப்பு வருது…
என்னன்னு சொல்லுவேன் ராசா…

ஆண் : செம்பருத்திப் பூவுக்கு சேலையொன்னு செல்லம்மா…
நானிருக்கேன் கட்டிக்கோ நாணமென்ன சொல்லம்மா…

—BGM—

பெண் : பூங்காத்து நெருப்பாச்சு…
அது உள்ளுக்குள்ளே கொதிப்பாச்சு…
குத்தாலக் குயிலே துணை நீதானையா…
துணை நீதானையா…

பெண் : செம்பருத்திப் பூவுக்கு சேலையொன்னு தாரியா…
கை புடிச்சு அழகா கட்டி விட வாரியா…

—BGM—

பெண் : சின்னப் பட்டி தொட்டி எங்கும் உன் பேரையா…
நெத்திப் பொட்டு ஒண்ணு வச்சு நீ வாரியா…

குழு : பச்சக் கிளி வச்சு விடு…

பெண் : வில்லு வில்லு வண்டி கட்டி வந்தா என்ன…
இந்தப் பொண்ண கட்டிக்கிட்டு போனா என்ன…

குழு : மயக்கும் கண்ணிலே தந்தி கொடு…
அவன் மனசு போல நீ முந்தி கொடு…

ஆண் : சொன்னாலே மணக்கும்…
இந்த நெஞ்சுக்குள்ளே இனிக்கும்…
சொன்னாலே மணக்கும்…
இந்த நெஞ்சுக்குள்ளே இனிக்கும்…

ஆண் : மஞ்சத் தாலி இருக்கு…
மால கூட இருக்கு…
மங்கள வாத்தியம் வேணும்…

பெண் : செம்பருத்திப் பூவுக்கு சேலையொன்னு தாரியா…
கை புடிச்சு அழகா கட்டி விட வாரியா…

ஆண் : பூங்காத்து நெருப்பாச்சு…
அது உள்ளுக்குள்ளே கொதிப்பாச்சு…
குத்தாலக் குயிலே துணை நீதானம்மா…
துணை நீதானம்மா…


Notes : Sembaruthi Poovukku Song Lyrics in Tamil. This Song from Dharma (1998). Song Lyrics penned by Pulamaipithan. செம்பருத்திப் பூவுக்கு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading