சீமைக்காரியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கார்த்திக் நேத்தாசஞ்சித் ஹெக்டேலியோன் ஜேம்ஸ்சபா நாயகன்

Seemakaariye Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : என்னவொரு பார்வையம்மாடி…
என்னவொரு ஜாடையம்மாடி…
என்னவொரு ஆடையம்மாடி…

ஆண் : என்னவொரு மாயக்கண்ணாடி…
வந்து நின்னு நானும் முன்னாடி…
துள்ளி வரும் ஆடும் தள்ளாடி…

ஆண் : விரல் அசைவே எனை ஏதோ செய்தாய்…
ஒளி கசிவே ஒருவித மாயம் செய்தாய்…
தலை முடியால் அடி தூண்டில் இட்டாய்…
விரும்பி அழகாய் சிறு மீனாக மாற்றினேன்…

—BGM—

ஆண் : யே… சீமைக்காரியே மாயமாகியே…
ஏனோ வானாகி வேலாகி பார்த்தாய்…
சீமைக்காரியே ஆலங்கட்டியே…
நீதான் உள்ளூரில் வீழ்ந்திடும் மழையா பனியா…

ஆண் : என்னவொரு பார்வையம்மாடி…
என்னவொரு ஜாடையம்மாடி…
என்னவொரு ஆடையம்மாடி…

—BGM—

ஆண் : தூங்கா ஆந்தை அடி நான் கொண்ட வாழ்க்கை…
உன் நினைவாலே வீழ்ந்து கிடக்கும் ஏனோ ஏனோ…
தூங்கா ஆந்தை அடி நான் கொண்ட வாழ்க்கை…
உன் நினைவாலே வீழ்ந்து கிடக்கும் ஏனோ ஏனோ…

ஆண் : வாவீர்ப்பின் வாசம்…
அது தானாக வீசும்…
என் புலன் ஐந்தும் வளளல்கள் ஆகும் ஏனோ ஏனோ…

ஆண் : நீ ஆகாயம் காணத பஞ்ச வர்ண மேகம்…
நீ பூலோகம் கேட்காத ராக தாளம்…
நீ யாரோடும் பேசாத தூர தேசம் மெளனம்…
நீ ஜல் ஜல் ஊஞ்சல்…

ஆண் : யே… சீமைக்காரியே மாயமாகியே…
ஏனோ வானாகி வேலாகி பார்த்தாய்…
சீமைக்காரியே ஆலங்கட்டியே…
நீதான் உள்ளூரில் வீழ்ந்திடும் மழையா பனியா…

—BGM—

ஆண் : என்னவொரு பார்வையம்மாடி…
என்னவொரு ஜாடையம்மாடி…
என்னவொரு ஆடையம்மாடி…

ஆண் : என்னவொரு மாயக்கண்ணாடி…
வந்து நின்னு நானும் முன்னாடி…
துள்ளி வரும் ஆடும் தள்ளாடி…


Notes : Seemakaariye Song Lyrics in Tamil. This Song from Saba Nayagan (2023). Song Lyrics penned by Karthik Netha. சீமைக்காரியே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading