கள்வனே கள்வனே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஹரிசரண் & என்.எஸ்.கே. ரம்யாஇளையராஜாமேகா

Kalvane Song Lyrics in Tamil

—BGM—

பெண் : கள்வனே கள்வனே என்னதான் மாயம் செய்தாய்…
கண்ணிலே கண்ணிலே என்னைதான் நீயும் கொய்தாய்…
கள்வனே கள்வனே என்னதான் மாயம் செய்தாய்…
கண்ணிலே கண்ணிலே என்னைதான் நீயும் கொய்தாய்…

ஆண் : பேசும் நிலவே நான் உன்னோடு பேசா கதையா…
எந்தன் வீடெங்கும் இன்றேனோ வீசா ஒளியா…
மெளனமாய் நான் பேச நீ பேச நாம் பேச…

பெண் : கள்வனே கள்வனே என்னதான் மாயம் செய்தாய்…
கண்ணிலே கண்ணிலே என்னைதான் நீயும் கொய்தாய்…
தனானா நானா நானா னா னா…
தனானா நானா நானா னா னா…

—BGM—

ஆண் : காதலாகி காற்றிலாடும் மேகமானேனே…
விண்ணோடு சென்றேனே… ஹோஹோ…
தூறலாகி உன்னைத் தீண்ட தாகம் கொண்டேனே…
உன் கையில் வந்தேனே…

பெண் : வேறாரும் போகாத பூமி…
காணாத வானம்…
போகாத பூமி காணாத வானம்…
கைகோர்த்து சென்று நாம் காண வேண்டும்…

ஆண் : காதலால் காலங்கள் இங்கே நின்றே போகும்…

பெண் : கள்வனே கள்வனே என்னதான் மாயம் செய்தாய்…
கண்ணிலே கண்ணிலே என்னைதான் நீயும் கொய்தாய்…

—BGM—

பெண் : தூறும் போது வானவில்லில் என்ன வண்ணங்கள்…
நெஞ்சோடு கொஞ்சாதோ…
வேறு வேறு பார்வையென்றும் வீசியே சென்றாய்…
மின்சாரம் எங்கெங்கும்…

ஆண் : தாங்காத தீ மூட்டும் பார்வை…
போர் மூட்டும் வேளை…
தீ மூட்டும் பார்வை போர் மூட்டும் வேளை…
தீராத தாகம் கொண்டாளே பாவை…

பெண் : ஆயிரம் பேசலாம் ஆயினும் மெளனம் மெளனம்…

ஆண் : கண்மணி கண்மணி என்னதான் மாயம் செய்தாய்…
கண்ணிலே கண்ணிலே என்னைதான் காயம் செய்தாய்…
கண்மணி கண்மணி என்னதான் மாயம் செய்தாய்…
கண்ணிலே கண்ணிலே என்னைதான் காயம் செய்தாய்…

ஆண் : பேசும் நிலவே நான் உன்னோடு பேசா கதையா…
எந்தன் வீடெங்கும் இன்றேனோ வீசா ஒளியா…
மெளனமாய் நான் பேச நீ பேச நாம் பேச…

—BGM—

ஆண் : கண்மணி கண்மணி என்னதான் மாயம் செய்தாய்…
கண்ணிலே கண்ணிலே என்னைதான் காயம் செய்தாய்…
தனானா நானா நானா னா னா…
தனானா நானா நானா னா னா…

Notes : Kalvane Song Lyrics in Tamil. This Song from Megha (2014). Song Lyrics penned by Na. Muthukumar. கள்வனே கள்வனே பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading