சகலகலா வல்லவனே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்ஹரிஹரன் & சுஜாதாதேவாபம்மல் கே. சம்பந்தம்

Sakalakala Vallavane Song Lyrics in Tamil


—BGM—

பெண் : சகலகலா வல்லவனே…
சலவை செய்த சந்திரனே…

—BGM—

பெண் : சகலகலா வல்லவனே…
சலவைச் செய்த சந்திரனே…
தென்னவனே சின்னவனே…
தேவதையின் மன்னவனே…
இவன் பருவத்தை அணைக்கின்ற போது…
பத்து விரல் பத்தாது…

ஆண் : கனவா இவள் காதலியா…
மனதைக் கிள்ளும் மனைவியா…

—BGM—

பெண் : காதல் ஒற்றைக் கண்ணில்…
காமம் ஒற்றைக் கண்ணில்…
எந்தக் கண்ணால் என்னைப் பார்க்கிறாய்…
கண்ணா கண்ணா…

—BGM—

ஆண் : காமம் காதல் ரெண்டும்…
எந்தன் கண்ணில் இல்லை…
கண்கள் மூடி உன்னைக் காண்கிறேன்…
கண்ணே கண்ணே…

பெண் : நீ வேறு நான் வேறு…
நாம் வேரு பூவும் ஆவோம்…

ஆண் : நீ என்னை வளைக்காதே…
நான் கேள்விக்குறி ஆகிப்போவேனே…

—BGM—

ஆண் : சிற்பம் போல வாழ்ந்தேன்…
என்னை செதுக்க வந்தாய்…
மீண்டும் பாறை ஆவேன்…
நியாயமா காதல் பெண்ணே பெண்ணே…

—BGM—

பெண் : தொட்டில் செடி ஆனேன்…
தோட்டம் வந்து சேர்ந்தேன்…
காம்பைத் தீண்டும் வேளை…
கைகளில் விழுந்தேன் கண்ணா…

ஆண் : உன் வாயால் என் பேரை…
நான் உச்சரிக்க வேண்டும்…

பெண் : உன் தீயால் என் சேலை…
தினம் தீக்குளிக்க வேண்டும் வேண்டுமே…

—BGM—

பெண் : சகலகலா வல்லவனே…
சலவைச் செய்த சந்திரனே…
தென்னவனே சின்னவனே…
தேவதையின் மன்னவனே…

ஆண் : என்னை பூவுக்குள் நீ பூட்டும் வேலை…
போதும் போதும் உன் லீலை…

—BGM—


Notes : Sakalakala Vallavane Song Lyrics in Tamil. This Song from Pammal K. Sambandam (2002). Song Lyrics penned by Kabilan. சகலகலா வல்லவனே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading