| பாடலாசிரியர் | பாடகர் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| வைரமுத்து | மது பாலகிருஷ்ணன் | சாம் சி.எஸ் | திருவின் குரல் |
Appa En Appa Song Lyrics in Tamil
ஆண் : மொழியே மொழியே தொலைந்தாலும்…
இதயம் இதயம் உளையாதே…
உலகின் பொருள்கள் மறைந்தாலும்…
உணர்வின் அலைகள் மிதந்தாலும்…
அப்பா அப்பா…
—BGM—
ஆண் : தாயே தாயே என்பார்கள்…
தந்தையின் தியாகம் மறந்தார்கள்…
பாலாய் தந்தவள் தாய் என்றால்…
ஆளாய் செய்தவன் நீதானே…
ஆண் : இந்த எலும்பும் இந்த சதையும்…
உந்தன் வித்தில்தானே உரு ஆச்சு…
என்னை கொடுத்து உன் நினை வெடுப்பாய்…
எனக்குள்ள சபதம் எழுந்தாச்சு…
ஆண் : அப்பா என்பது மொத்த உலகம்…
அப்பா இல்லையே செத்த நரகம்…
அப்பா அன்புதான் தங்க சுரங்கம்…
தங்க சுரங்கம்…
ஆண் : அப்பா என் அப்பா எனக்கு நாயகன்…
அப்பா என் அப்பா உனக்கு சேவகன்…
அப்பா என் அப்பா எனது காவலன்…
அப்பா என் அப்பா…
ஆண் : அப்பா என் அப்பா எனக்கு நாயகன்…
அப்பா என் அப்பா உனக்கு சேவகன்…
அப்பா என் அப்பா எனது காவலன்…
அப்பா அப்பா அப்பா…
—BGM—
ஆண் : சொக்க தமிழ் மொழியில் சொர்க்கம் பல…
வாய் மொழியில் வழங்க வாய்ப்பே இல்ல…
அப்பன் பேர சொல்லனும் மெல்ல மெல்ல…
அத விட எனக்கு ஆசை இல்ல…
ஆண் : தந்தையின் உள்ளங்கை தொடும்போது…
சிங்கத்தின் பலம் சேரும்…
தந்தைக்கு மகன்தான் உயிர் தந்தான்…
தலைமுறை ஜெயம்காணும்…
ஆண் : அப்பா என் அப்பா எனக்கு நாயகன்…
அப்பா என் அப்பா உனக்கு சேவகன்…
அப்பா என் அப்ப எனது காவலன்…
அப்பா அப்பா அப்பா…
—BGM—
ஆண் : மலையே மடியில் சரிந்தாலும்…
மனமே மனமே கலங்காதே…
கடலே தலையில் கவிந்தாலும்…
மகனே மகனே மயங்காதே… மயங்காதே…
ஆண் : ஆண்டவனை தமிழன் அப்பன் என்பான்…
அப்பனையும் தழிழன் ஆண்டவன் என்பான்…
என்னோட கணக்கில் ரெண்டும் ஒண்ணு…
சொல்லபோனா கடவுள் ரெண்டான் கண்ணு…
ஆண் : பிறவி கொடுத்தாய் எதற்காக…
பேர் சொல்ல அதற்காக…
பெருங்கொண்ட தோள்கள் எதற்காக…
பகை வெல்ல அதற்காக…
ஆண் : அப்பா என் அப்பா எனக்கு நாயகன்…
அப்பா என் அப்பா உனக்கு சேவகன்…
அப்பா என் அப்பா எனக்கு காவலன்…
அப்பா என் அப்பா…
ஆண் : அப்பா என் அப்பா எனக்கு நாயகன்…
அப்பா என் அப்பா உனக்கு சேவகன்…
அப்பா என் அப்பா எனது காவலன்…
அப்பா அப்பா அப்பா…
—BGM—
Notes : Appa En Appa Song Lyrics in Tamil. This Song from Thiruvin Kural (2023). Song Lyrics penned by Vairamuthu. அப்பா என் அப்பா பாடல் வரிகள்.

