ரோஜா மலரே ராஜகுமாரி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்பி.பி.ஸ்ரீனிவாஸ் & பி. சுசீலாஎம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்திவீரத் திருமகன்

Roja Malarae Song Lyrics in Tamil


BGM

ஆண் : ரோஜா மலரே ராஜ குமாரி…
ஆசை கிளியே அழகிய ராணி…
அருகில் வரலாமா… ஹோய்…
வருவதும் சரிதானா…
உறவும் முறைதானா…

பெண் : வாராய் அருகே மன்னவன் நீயே…
காதல் கணம் அன்றோ… ஓஓ…
பேதம் இல்லை அன்றோ… ஓஓ…
காதல் நிலை அன்றோ… ஓஓ…

பெண் : ஏழை என்றாலும் ராஜகுமாரன்…
ராஜா மகளின் காதல் தலைவன்…
உண்மை இதுவன்றோ… ஹோ…
உலகின் முறை அன்றோ… ஓஓ…
என்றும் நிலை அன்றோ… ஓஓ…

BGM

ஆண் : வானத்தின் மீது பறந்தாலும்…
காக்கை கிளியாய் மாறாது…
கோட்டையின் மேலே நின்றாலும்…
ஏழையின் பெருமை உயராது…

ஆண் : ஓடி அலைந்து காதலில் கலந்து…
நாட்டை இழந்தவர் பலர் அன்றோ…
ஓடி அலைந்து காதலில் கலந்து…
நாட்டை இழந்தவர் பலர் அன்றோ…

பெண் : மன்னவர் நாடும் மணி முடியும்…
மாளிகை வாழும் தோழியரும்…
பஞ்சனை சுகமும் பால் பழமும்…
படையும் உடையும் சேவகரும்…

பெண் : ஒன்றாய் இணையும் காதலர் முன்னே…
கானல் நீர் போல் மறையாதோ…
ஒன்றாய் இணையும் காதலர் முன்னே…
கானல் நீர் போல் மறையாதோ…

ஆண் : ரோஜா மலரே ராஜ குமாரி…
ஆசை கிளியே அழகிய ராணி…
அருகில் வரலாமா… ஹோய்…
வருவதும் சரிதானா…
உறவும் முறைதானா…

BGM

ஆண் : பாடும் பறவை கூட்டங்களே…
பச்சை ஆடை தோட்டங்களே…

பெண் : விண்ணில் தவழும் ராகங்களே…
வேகம் போகும் மேகங்களே…

ஆண் & பெண் : ஓர் வழி கண்டோம்…
ஒரு மனமானோம்…
வாழிய பாடல் பாடுங்களேன்…

ஆண் & பெண் : ஓர் வழி கண்டோம்…
ஒரு மனமானோம்…
வாழிய பாடல் பாடுங்களேன்…

ஆண் : ரோஜா மலரே ராஜ குமாரி…
பெண் : ஏழை என்றாலும் ராஜகுமாரன்…

ஆண் & பெண் : உண்மை இதுவன்றோ… ஹோய்…
உலகின் முறை அன்றோ… ஓஓ…
என்றும் நிலை அன்றோ… ஓஓ…

BGM


Notes : Roja Malarae Song Lyrics in Tamil. This Song from Veerathirumugan (1962). Song Lyrics penned by Kannadasan. ரோஜா மலரே ராஜகுமாரி பாடல் வரிகள்.


Scroll to Top