ரோஜாக் கடலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஷங்கர் மகாதேவன், சுனிதி சவுகான் & சின்மயிஹாரிஸ் ஜெயராஜ்அனேகன்

Roja Kadale Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ரோஜாக் கடலே…
என் ராஜா மகளே…
என் ஆசைக் கனியே…
வா தனியே…

பெண் : காதல் துணையே…
என் கண்ணின் மணியே…
என் இன்னோா் உயிரே…
வா அருகே…

ஆண் : பூக்களின் பிள்ளாய்…
புன்னகைக் கிள்ளாய்…
பொன்னில் வாா்த்தது மேனி…

பெண் : பூச்செடி என்மேல்…
காற்றடித்தாலும்…
உன் நெஞ்சில்…
தைக்குமோ ஆணி…

ஆண் : வா வா…
அலைகடல் சிறுதுளி வா வா…
பெண்ணே வா வா…
எாிமலை சிறு பொறி வா வா…

பெண் : வா வா…
அலைகடல் சிறுதுளி வா வா…
கண்ணா வா வா…
எாிமலை சிறு பொறி வா வா…

ஆண் : உளி கொண்டு எய்தாலும்…
ஒளி என்றும் தேயாது…
அதுபோல் நம்காதல் மானே…

ஆண் : ரோஜாக் கடலே…
என் ராஜா மகளே…
என் ஆசைக் கனியே…
வா தனியே…

பெண் : காதல் துணையே…
என் கண்ணின் மணியே…
என் இன்னோா் உயிரே…
வா அருகே…

—BGM—

ஆண் : செவ்வாய்க் குயிலே…
பொன் செவ்வேல் விழியே…
என் செவ்வால் கிளியே…
வா வெளியே…

ஆண் : நீா் வாழ் குழலே…
கண் நோ் காண் எழிலே…
என் மாா்மேல் மயிலே…
வா வெளியே…

ஆண் : ஆட்படை கொண்டு தாக்கிய போதும்…
வானம் வளைவதும் இல்லை…
நாற் படைக் கண்டு ஆா்பாித்தாலும்…
வேட்கை அழிவதும் இல்லை…

ஆண் : போவோம் நிலம் விட்டு…
நிலவுக்கு போவோம்…
இனி வாழ்வோம் உயிருக்கு…
உயிா் தந்து வாழ்வோம்…

ஆண் : கண்டங்கள் பிண்டாலும்…
அண்டங்கள் விண்டாலும்…
நெஞ்சங்கள் மாறாது வா வா…

ஆண் : செவ்வாய்க் குயிலே…
பொன் செவ்வேல் விழியே…
என் செவ்வால் கிளியே…
வா வெளியே…

ஆண் : நீா் வாழ் குழலே…
கண் நோ் காண் எழிலே…
என் மாா்மேல் மயிலே…
வா வெளியே…

—BGM—

ஆண் : தேனே தேனே தேனே தேனே…
வா வா தேனே…
மானே மானே மானே மானே…
எந்தன் மானே…

ஆண் : பருவச்சிட்டே…
பவள திட்டே…
இதழைத் தந்தால் எதையும் தருவேன்…

பெண் : புகழும் அய்யா…
புழுகுப்பையா…
சிறு போா் வந்தால் என்னை மறப்பாய்…

ஆண் : வில்லும் அம்பும் சோ்ந்தாலும்…
சோ்ந்தே வாழ்வதும் இல்லை

பெண் : சொல்லும் பொருளும் ஆனோமே…
என்றும் பிாிவே இல்லை…

ஆண் : வா வா…
அலைகடல் சிறுதுளி வா வா…
பெண்ணே வா வா…
எாிமலை சிறு பொறி வா வா…

பெண் : வா வா…
அலைகடல் சிறுதுளி வா வா…
கண்ணா வா வா…
எாிமலை சிறு பொறி வா வா…

ஆண் : கண்டங்கள் பிண்டாலும்…
அண்டங்கள் விண்டாலும்…
நெஞ்சங்கள் மாறாது வா வா…

ஆண் : தேனே தேனே தேனே தேனே…
வா வா தேனே…
மானே மானே மானே மானே…
எந்தன் மானே…

ஆண் : தேனே தேனே தேனே தேனே…
வா வா தேனே…
மானே மானே மானே மானே…
எந்தன் மானே…


Notes : Roja Kadale Song Lyrics in Tamil. This Song from Anegan (2015). Song Lyrics penned by Vairamuthu. ரோஜாக் கடலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading