ஆத்தாடி ஆத்தாடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபவதாரிணி, திப்பு, தனுஷ் & அபய் ஜோத்புர்கர்ஹாரிஸ் ஜெயராஜ்அனேகன்

Aathadi Aathadi Song Lyrics in Tamil


—BGM—

பெண் : ஆத்தாடி ஆத்தாடி…
செம்பருத்தி பூக்காாி…
ஆசைப்பட்டு பூத்திருக்கா வா…

பெண் : உன் ராசாத்தி ராசாத்தி…
ரங்கூனுக்கு ராசாத்தி…
ராப்பகலா காத்‌திருக்கா வா…

பெண் : இது முதல் முதலாய் சிலு சிலுப்பு…
முதுகு தண்டில் குறுகுறுப்பு…
முழு விவரம் எனக்கு சொல்வாயா…

பெண் : என் அடி மனசில் சுகம் இருக்கு…
அடி வயிற்றில் பயம் இருக்கு…
அதுக்கு மட்டும் மருந்து சொல்வாயா…

பெண் : ஆத்தாடி…

—BGM—

பெண் : ஆத்தாடி ஆத்தாடி…
செம்பருத்தி பூக்காாி…
ஆசைப்பட்டு பூத்திருக்கா வா…

பெண் : உன் ராசாத்தி ராசாத்தி…
ரங்கூனுக்கு ராசாத்தி…
ராப்பகலா காத்‌திருக்கா வா…

—BGM—

ஆண் : நீ மகுடத்தில் வைர கல்லு…
நானோ மழ பெஞ்சா உப்பு கல்லு…
உன்ன தொடவும் விரல் படவும்…
ஒரு பொருத்தம் எனக்கேது…

பெண் : நான் தரமான தங்கக்கட்டி…
நீ தகரத்தில் கெட்டிப்பெட்டி…
என்னை அடைக்க காத்து கெடக்கு…
உன்ன போல ஆளு ஏது…

ஆண் : ஆசைகள் இருந்தா கூட…
மனம் மசியாது…
ஆத்துல விழுந்தா கூட…
நிழல் நனையாது…

பெண் : உள்ளுக்குள் உள்ள கிறுக்கு…
உன்ன சும்மா விடாது…

ஆண் : ஆத்தாடி ஆத்தாடி…
செம்பருத்தி பூக்காாி…
ஆசைப்பட்டு பூத்திருக்காலா…

ஆண் : உன் ராசாத்தி ராசாத்தி…
ரங்கூனுக்கு ராசாத்தி…
ராப்பகலா காத்‌திருக்காலா…

—BGM—

பெண் : கடிகார முள்ளப் போல…
என்ன கணம் தோறும் சுத்தி வாயா…
என்ன தொறத்து தூள்பறத்து…
இந்த அல்லிப் பூ கிள்ளி போயா…

ஆண் : புளி மூட்ட தூக்கி பாா்த்தேன்…
இப்ப பூ மூட்ட தூக்க போறேன்…
இளஞ்சிாிக்கி உன்ன முறுக்கி…
என் அருணாக்கயிறு ஆக்க போறேன்…

பெண் : இடுப்புல கயிறா கெடக்க…
மனம் தயங்குதையா…
கழுத்துல கயிறா வந்தா…
நித்தமும் சொந்தம் அய்யா…

ஆண் : விழியால் தொட்ட அழகே…
இந்த ஆச மாறாதே…

பெண் : ஆத்தாடி ஆத்தாடி…
செம்பருத்தி பூக்காாி…
ஆசைப்பட்டு பூத்திருக்கா வா…

பெண் : உன் ராசாத்தி ராசாத்தி…
ரங்கூனுக்கு ராசாத்தி…
ராப்பகலா காத்‌திருக்கா வா…

ஆண் : இது முதல் முதலாய் சிலு சிலுப்பு…
முதுகு தண்டில் குறுகுறுப்பு…
முழு விவரம் எனக்கு சொல்வாயா…

ஆண் : என் அடி மனசில் சுகம் இருக்கு…
அடி வயிற்றில் பயம் இருக்கு…
அதுக்கு மட்டும் மருந்து சொல்வாயா…

—BGM—


Notes : Aathadi Aathadi Song Lyrics in Tamil. This Song from Anegan (2015). Song Lyrics penned by Vairamuthu. ஆத்தாடி ஆத்தாடி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading