ரைட்டும் ஓடுதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஜெயமுருகன் டி.எம்ஏஜே அலிமிர்சாக்ஜெயமுருகன் டி.எம்தீ இவன்

Rightum Oduthu Song Lyrics in Tamil


BGM

ஆண் : ரைட்டும் ஓடுதே…
ஒன்வேயில் ராங்கும் ஓடுதே…
சைவம் ரத்தம் கேக்குதே…
ரன்வேயில் நாக்கு நீட்டுதே…

ஆண் : லவ்வும் ஓடுதே…
லவ்வோடு நஞ்சும் ஓடுதே…
ரெண்டும் தப்பியோடுதே…
தப்பித்தால் தொல்லை கூடுதே…

ஆண் : சள்ளை நீளுதே…
சாத்தானின் மூளையானதே…
சண்டை போடுதே…
சந்தோஷம் செத்து வாழுதே…

ஆண் : பணம் பணம் ஓடாதே…
குணம் இழந்து போவ…
மணம் இழந்த பூவாய்…
தினம் உதிர்ந்து போவ…

ஆண் : இன்பம் துன்பம் இரண்டும் வருகுது…
இன்னல் செய்ய இன்றே மறந்திடு…
வாய்மை என்றும் வெல்லும் துணிந்திடு…
வலிமை நின்று கொல்லும் வென்றிடு…

ஆண் : தவற திருத்த உனக்கு விரும்பம் இல்ல…
தப்பில் விழுந்த எவனும் எழுந்துதில்ல…
திறமை இருந்து உழைக்க நினைக்கவில்ல…
வறுமை இருந்தும் அணைக்க விரும்பவில்ல…

ஆண் : மேல கத்தி தொங்கி தொடருத ஓடு…
நின்னா ஒட்டம் அடங்கிடும் போதும்…
வேணாம் அடங்கிடு அடங்கிடு கூலா…
நீ நடந்திடுடா…

ஆண் : ஆட்டம் போட்டும் அடங்கல கூட்டம்…
கூட்டி அலப்பற கொடுக்கிற…
ஆறறிவு ஓர் அறிவாய் மாற…
ஐம்புலன்கள் உன் மதியை மீற…

ஆண் : உயிர் எடுக்க நீ யாரு…
உயிர் கொடுக்க பாரு…
தினம் நடக்கும் போரு…
துணிவுடன் நீ ஏறு…

ஆண் : எட்டுத்திக்கும் அன்பை விதைத்திடு…
எட்டிப்பாக்கம் வன்மம் புதைந்திடு…
குட்டிச் சுவரை எட்டி உதைந்திடு…
சுற்றம் முற்றம் அன்பாய் இருந்திடு…

ஆண் : கடல கடக்கும் பறவ விழுந்ததில்ல…
உடல கடக்கும் உசுரு திரும்பவில்ல…
மனத அடக்கும் மனிதன் அழிந்ததில்ல…
மரணம் இருக்கு தெரிஞ்சம் அடக்கமில்ல…

ஆண் : வாழ்க்கன்னு இருந்தா…
நீ ஓடி தாண்டு வேணுன்டா…
பயத்த தூக்கி போடடா…
போராடி வாழப்பாருடா…

ஆண் : துள்ளி ஓடடா…
உன்னோட உண்மை காட்டுடா…
வாடா வெல்லும் ரூட்டுடா…
நீ ஓடி வெற்றி நாட்டுடா…

ஆண் : ஸ்பீடு ஏத்துடா…
உன்னோட பீலு மாத்துடா…
தோளா நம்ம மாத்துடா…
நிக்காம வீசும் காத்துடா…

ஆண் : சுடசுடத்தான் தங்கம்…
வலி பொறுத்து போடா…
படபடத்தான் வாழ்க்கை…
பலம் கொடுக்கும் வாடா…

ஆண் : செய்யும் தர்மம் உன்னை உயர்த்திடு…
உந்தன் வேர்வை வெற்றி கொடுத்திடும்…
மண்ணை முட்டிடும் ஜீவன் முளைத்திடும்…
தன்னை தந்தால் உன்னை வளர்த்திடும்…

ஆண் : உலகம் சுழல உயிர்கள் நிலைக்குதடா…
இரவும் பகலும் இதனால் நகருதடா…
மறந்தால் மனதில் மனிதம் இருக்குதடா…
மனிதன் செயலால் உலகம் சிறக்குதடா…

BGM

ஆண் : சாத்தான் சாத்தான் சாத்தான்…

BGM


Notes : Rightum Oduthu Song Lyrics in Tamil. This Song from Thee Ivan (2023). Song Lyrics penned by Jayamurugan T.M. ரைட்டும் ஓடுதே பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top