கனிந்ததே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்திவாகர்ஆர்.எஸ்.ராஜ்பிரதாப்கபில் ரிட்டன்ஸ்

Kanindhade Song Lyrics in Tamil


ஆண் : கனிந்ததே காலம் கனிந்ததே…
பிறந்ததே வாழ்வே பிறந்ததே…

—BGM—

ஆண் : வானம் இனி தூரம் இல்லையே…
வாழ்க்கை இனி பாரம் இல்லே…
ஓடு இனி தடைகள் இல்லையே…
துணிவாய் துணிவாய்… ஓஓ…

ஆண் : விழுந்தால் நீ விதையாய் முளைத்திடு…
எழுந்தால் நீ மலையாய் எழுந்திடு…
புயலாய் உன் சிறகை விரித்திடு…
துணிவாய் துணிவாய்…

ஆண் : கனவுகள் யாவுமே…
கண்முன்னே இன்று நடக்குதே…
நம்பிக்கை வேர்களில்…
புது பூக்கள் பூக்கிறதே…

ஆண் : ஓடும் தரையில் வெற்றி…
ஓடுதல் மட்டும் நிறுத்தாதே நீ…
தேடும் வரையில் வாழ்க்கை…
தேடுதல் மட்டும் நிறுத்தாதே நீ…

ஆண் : கனிந்ததே கனிந்ததே…
காலம் கனிந்ததே…
பிறந்ததே பிறந்ததே…
வாழ்வே பிறந்ததே…

ஆண் : கனிந்ததே கனிந்ததே…
காலம் கனிந்ததே…
பிறந்ததே பிறந்ததே…
வாழ்வே பிறந்ததே…

—BGM—

ஆண் : சாதிக்க சொல்வது உன் நெஞ்சுக்குழி…
நெருப்புதான் வேறு இல்லடா…
உனை விட்டால் உனை வெல்ல…
இந்த உலகில் யாருமில்லடா…

ஆண் : சரித்திரம் என்பது…
ஒரு காகிதம் சொல்லுகிற கதை இல்லடா…
காலம் தன் நெற்றியில்…
உன் பெயரினை எழுதனும்டா…

ஆண் : எதுவரை உனது இலக்கு என்று…
யாருக்கும் இங்கு தெரியவில்ல…
மனத்துக்குள் உறுதி இருந்துவிட்டால்…
இங்கு வயதொன்றும் தடயில்லாடா…

ஆண் : உயரம் பள்ளமும் பாதை என்றால்…
பயம் வந்து உன்னை தொடுவதில்ல…
நம்பிக்கை உனது சொத்து என்றால்…
உனை தோல்விகள் தொடர்வதில்ல…

ஆண் : கனிந்ததே கனிந்ததே…
காலம் கனிந்ததே…
பிறந்ததே பிறந்ததே…
வாழ்வே பிறந்ததே…

ஆண் : கனிந்ததே கனிந்ததே…
காலம் கனிந்ததே…
பிறந்ததே பிறந்ததே…
வாழ்வே பிறந்ததே…

—BGM—

ஆண் : நாளைகள் உனக்கென…
ஒரு நட்சத்திர பந்தல் இட்டு காத்திருக்கடா…
இன்றுகள் உன் வசம்…
அதை மிச்சம் இன்றி வாழ்த்திடுடா…

ஆண் : ஒவ்வொரு விடியலும் உன் முகவரி…
தேடித்தானே அலையுதுடா…
மழை தரும் மேகங்கள்…
உன் வாசல் வந்து பொழியுமாடா…

ஆண் : துணிந்து நீ நடந்தால் எட்டு கிழக்கு…
துணிந்தவன் எவனுக்கும் இல்ல வழக்கு…
தினம் ஒரு வெற்றி என்று பறை முழங்கு…
உன் திறமைக்கு திமிர் இருக்கு…

ஆண் : வெல்வதென்று ஆனபின்னே விதி எதுக்கு…
வேள்விகளை வெல்வத்தர்க்கு மதி இருக்கு…
சுத்துக்கிற பூமி உந்தன் காலில் இருக்கு…
அது உன்னை சுற்ற காத்து கிடக்கு…

ஆண் : கனிந்ததே கனிந்ததே…
காலம் கனிந்ததே…
பிறந்ததே பிறந்ததே…
வாழ்வே பிறந்ததே…

ஆண் : கனிந்ததே கனிந்ததே…
காலம் கனிந்ததே…
பிறந்ததே பிறந்ததே…
வாழ்வே பிறந்ததே…


Notes : Kanindhade Song Lyrics in Tamil. This Song from Kapil Returns (2023). Song Lyrics penned by Snehan. கனிந்ததே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading