வீடுவரை உறவு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம்.சௌந்தரராஜன்எம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்திபாத காணிக்கை

Veedu Varai Uravu Song Lyrics in Tamil


ஆண் : ஆடிய ஆட்டமென்ன…
பேசிய வார்த்தை என்ன…
தேடிய செல்வமென்ன…

ஆண் : திரண்டதோர் சுற்றமென்ன…
கூடுவிட்டு ஆவிபோனால்…
கூடவே வருவதென்ன…

—BGM—

ஆண் : வீடுவரை உறவு…
வீதி வரை மனைவி…
காடு வரை பிள்ளை…
கடைசி வரை யாரோ…

ஆண் : வீடுவரை உறவு…
வீதி வரை மனைவி…
காடு வரை பிள்ளை…
கடைசி வரை யாரோ…

—BGM—

ஆண் : ஆடும் வரை ஆட்டம்…
ஆயிரத்தில் நாட்டம்…
ஆடும் வரை ஆட்டம்…
ஆயிரத்தில் நாட்டம்…
கூடிவரும் கூட்டம்…
கொள்ளி வரை வருமா…

ஆண் : வீடுவரை உறவு…
வீதி வரை மனைவி…
காடு வரை பிள்ளை…
கடைசி வரை யாரோ…
கடைசி வரை யாரோ…

—BGM—

ஆண் : தொட்டிலுக்கு அன்னை…
கட்டிலுக்குக் கன்னி…
தொட்டிலுக்கு அன்னை…
கட்டிலுக்குக் கன்னி…
பட்டினிக்குத் தீனி…
கெட்ட பின்பு ஞானி…

ஆண் : வீடுவரை உறவு…
வீதி வரை மனைவி…
காடு வரை பிள்ளை…
கடைசி வரை யாரோ…
கடைசி வரை யாரோ…

—BGM—

ஆண் : சென்றவனைக் கேட்டால் வந்துவிடு என்பான்…
வந்தவனைக் கேட்டால் சென்று விடு என்பான்…
சென்றவனைக் கேட்டால் வந்துவிடு என்பான்…
வந்தவனைக் கேட்டால் சென்று விடு என்பான்…
சென்று விடு என்பான்…

ஆண் : வீடுவரை உறவு…
வீதி வரை மனைவி…
காடு வரை பிள்ளை…
கடைசி வரை யாரோ…
கடைசி வரை யாரோ…

—BGM—

ஆண் : விட்டுவிடும் ஆவி…
பட்டுவிடும் மேனி…
சுட்டுவிடும் நெருப்பு…
சூனியத்தில் நிலைப்பு…
சூனியத்தில் நிலைப்பு…

ஆண் : வீடுவரை உறவு…
வீதி வரை மனைவி…
காடு வரை பிள்ளை…
கடைசி வரை யாரோ…
கடைசி வரை யாரோ…

—BGM—


Notes : Veedu Varai Uravu Song Lyrics in Tamil. This Song from Paadha Kaanikkai (1962). Song Lyrics penned by Kannadasan. வீடுவரை உறவு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading