ரெட்டைக் கிளிகள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.ஜே. யேசுதாஸ் & கே.எஸ். சித்ராஇளையராஜாஒரே ஒரு கிராமத்திலே

Rettai Kiligal Andradam Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ரெட்டைக் கிளிகள் அன்றாடம் பேசும்…
கட்டில் கதைகள்…

பெண் : இறக்கை விரித்து ஒன்றாக நீந்தும்…
எட்டுத் திசைகள்…

ஆண் : தண்ணீர் மேகம் பன்னீர் தூவும்…
பன்னீர் துளியும் வெந்நீராகும்…
பெண் : இளமையில் பல நிறங்களில் கனவுகள் எழ…

ஆண் : ரெட்டைக்கிளிகள் அன்றாடம் பேசும்…
கட்டில் கதைகள்…

—BGM—

ஆண் : ஈர பூக்களில் தேன் இதழ்களில் விழ…
நான் எடுத்தேன் நான் எடுத்தேன்…

பெண் : ஓர பார்வையில் உன் உணர்ச்சிகள் வர…
நான் படித்தேன் நான் படித்தேன்…

ஆண் : இதயத்தை திறந்தாய் நீ…
இடையினில் விழுந்தேன் நான்…

பெண் : எனக்கென பிறந்தாய் நீ…
இருப்பதை கொடுத்தேன் நான்…

ஆண் : நெஞ்சை தழுவி என் தோளில் சாயும்…
வெள்ளி அருவி…

பெண் : கண்ணில் எழுதி உன் பேரை பாடும்…
வண்ண குருவி…

ஆண் : சங்கீதம்தான் சந்தோஷம்தான்…
நம் உறவினில் பல சுரங்களும் லயங்களும் எழ…

ஆண் : ரெட்டைக் கிளிகள் அன்றாடம் பேசும்…
கட்டில் கதைகள்…

பெண் : இறக்கை விரித்து ஒன்றாக நீந்தும்…
எட்டுத் திசைகள்…

ஆண் : தண்ணீர் மேகம் பன்னீர் தூவும்…
பன்னீர் துளியும் வெந்நீராகும்…
பெண் : இளமையில் பல நிறங்களில் கனவுகள் எழ…

ஆண் : ரெட்டைக்கிளிகள் அன்றாடம் பேசும்…
கட்டில் கதைகள்…

—BGM—

பெண் : நேற்று ராத்திரி என் உடல் நனைந்திட…
நான் விழித்தேன் நான் விழித்தேன்…

ஆண் : காதல் நாயகன் உன் கனவினில் வந்து…
நான் கலந்தேன் நான் கலந்தேன்…

பெண் : இருட்டினில் வரலாமா…
இருபுறம் தொடலாமா…

ஆண் : இலக்கியம் இதுதானே…
இலக்கணம் கெடலாமா…

பெண் : விட்டுக் கொடுத்தால்…
கண்ணா உன் வேகம் கட்டுப்படுமோ…

ஆண் : தொட்டுப்பிடித்தால்…
கண்ணே உன் பார்வை சுட்டுவிடுமா…

பெண் : அம்மாடி நான் பெண் பாவைதான்…
உன் விரல்களும் தொட…
தலை முதல் அடிவரை சுட…

ஆண் : ரெட்டைக் கிளிகள் அன்றாடம் பேசும்…
கட்டில் கதைகள்…

பெண் : இறக்கை விரித்து ஒன்றாக நீந்தும்…
எட்டுத் திசைகள்…

ஆண் : தண்ணீர் மேகம் பன்னீர் தூவும்…
பன்னீர் துளியும் வெந்நீராகும்…
பெண் : இளமையில் பல நிறங்களில் கனவுகள் எழ…

—BGM—


Notes : Rettai Kiligal Andradam Song Lyrics in Tamil. This Song from Ore Oru Gramathiley (1987). Song Lyrics penned by Vaali. ரெட்டைக் கிளிகள் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading