ஓலக் குடிசையிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். ஜானகிஇளையராஜாஒரே ஒரு கிராமத்திலே

Ola Kudisaiyile Song Lyrics in Tamil


BGM

பெண் : ஓலக் குடிசையிலே பழஞ்சேலையில்…
ஊஞ்சலாடும் குயிலின் குஞ்சு இந்த பூம்பிஞ்சு…
ஓலக் குடிசையிலே பழஞ்சேலையில்…
ஊஞ்சலாடும் குயிலின் குஞ்சு இந்த பூம்பிஞ்சு…

பெண் : ரெக்கை இன்னும் மொளைக்கவில்லை…
இந்த பிஞ்சுக்கு…
தாயின் துணை வேணுமம்மா சின்ன பிஞ்சுக்கு…

பெண் : ரெக்கை இன்னும் மொளைக்கவில்லை…
இந்த பிஞ்சுக்கு…
தாயின் துணை வேணுமம்மா சின்ன பிஞ்சுக்கு…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஓலக் குடிசையிலே பழஞ்சேலையில்…
ஊஞ்சலாடும் குயிலின் குஞ்சு இந்த பூம்பிஞ்சு…

BGM

பெண் : முத்துக்கு யாரும் முழுகத்தான் வேணும்…
முழுகாம நானே முத்தேடுத்தேனே…
மலையோடி பாயும் மணிமுத்து ஆறு…
மடியேறி ஆடும் மகனாச்சு பாரு…

பெண் : நான் பாடும் பாட்டு தூங்காதே கேட்டு…
அஞ்சாத சிங்கம் போல் ஐயா நீ முன்னேறு…

பெண் : ஓலக் குடிசையிலே பழஞ்சேலையில்…
ஊஞ்சலாடும் குயிலின் குஞ்சு இந்த பூம்பிஞ்சு…

பெண் : ரெக்கை இன்னும் மொளைக்கவில்லை…
இந்த பிஞ்சுக்கு…
தாயின் துணை வேணுமம்மா சின்ன பிஞ்சுக்கு…

பெண் : ஓலக் குடிசையிலே பழஞ்சேலையில்…
ஊஞ்சலாடும் குயிலின் குஞ்சு இந்த பூம்பிஞ்சு…

BGM

பெண் : நான் செஞ்ச பாவம் மார் வத்திப் போச்சு…
வானத்தைப் பாத்த மண் போல ஆச்சு…

பெண் : மண் பானை கூழ குடிச்சாலும் ஏழ…
மண்ணாளும் வேள வரக்கூடும் நாள…

பெண் : மீனாட்சி ஆத்தா கண் கொண்டு பாத்தா…
மண்ணெல்லாம் பொன்னாகும் முள்ளெல்லாம் பூவாகும்…

பெண் : ஓலக் குடிசையிலே பழஞ்சேலையில்…
ஊஞ்சலாடும் குயிலின் குஞ்சு இந்த பூம்பிஞ்சு…

பெண் : ரெக்கை இன்னும் மொளைக்கவில்லை…
இந்த பிஞ்சுக்கு…
தாயின் துணை வேணுமம்மா சின்ன பிஞ்சுக்கு…

பெண் : ஓலக் குடிசையிலே பழஞ்சேலையில்…
ஊஞ்சலாடும் குயிலின் குஞ்சு இந்த பூம்பிஞ்சு…


Notes : Ola Kudisaiyile Song Lyrics in Tamil. This Song from Ore Oru Gramathiley (1987). Song Lyrics penned by Vaali. ஓலக் குடிசையிலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading