| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| வாலி | எஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ரா | இளையராஜா | பூவரசன் |
Raasaathi Song Lyrics in Tamil
ஆண் : ராசாத்தி ராசாத்தி…
உன்னை எண்ணி மனம் உருகி நின்றேனடி…
ராசாத்தி ராசாத்தி…
உன்னை எண்ணி மனம் உருகி நின்றேனடி…
ஆண் : செந்தாழம் பூவே சிறுகூடல் முத்தே…
முத்துப்பூ சூடிக்கொள்ளூம் நாள் சொல்லடி…
பெண் : ராசாவே ராசாவே…
உன்னை எண்ணி மனம் உருகி நின்றேன் இங்கே…
ராசாவே ராசாவே…
உன்னை எண்ணி மனம் உருகி நின்றேன் இங்கே…
—BGM—
ஆண் : ஏரிக்கரை காத்தப்போல…
என் மனசு லேசாச்சு…
ஏறி நின்னு உந்தன் மேல…
ஆசை கொண்டு அலையாச்சு…
பெண் : தூண்டில் போட்டு மீனுக்காக…
காத்திருக்கும் ராசாவே…
தூண்டில் முள்ளில் சிக்கிப்போச்சு…
என் மனசு லேசாவே…
ஆண் : எப்போதும் ஏங்கும் ஏழையப் போல…
முப்போதும் நெஞ்சம் உன் பின்னாலே…
பெண் : அன்பாலே ஏழைகள் சீமானய்யா…
நீதானே எந்தன் கோமானய்யா…
பெண் : ராசாவே ராசாவே…
உன்னை எண்ணி மனம் உருகி நின்றேன் இங்கே…
ராசாவே ராசாவே…
உன்னை எண்ணி மனம் உருகி நின்றேன் இங்கே…
—BGM—
பெண் : அஞ்சுகத்தின் கல்யாணத்தை ஆசையோடு பார்த்தேனே…
கொஞ்சி வந்த நாதஸ்வர ஒசை ஒன்று கேட்டேனே…
ஆண் : என்னை வந்து மாப்பிள்ளையா…
மணவறையில் பார்த்தாயா…
உன்னை என்னை ஜோடியாக்கி…
ஒன்றில் ஒன்று சேர்த்தாயா…
பெண் : நாம் என்று கேட்டோம் நாயன ஓசை…
நாளாகும் போது பெருகுது ஆசை…
ஆண் : மீனாட்சியம்மா கண் பார்க்கணும்…
மாறாமல் நம்மை கை சேர்க்கணும்…
ஆண் : ராசாத்தி ராசாத்தி…
உன்னை எண்ணி மனம் உருகி நின்றேனடி…
ராசாத்தி ராசாத்தி…
உன்னை எண்ணி மனம் உருகி நின்றேனடி…
பெண் : செந்தாழம் பூவே சிறுகூடல் முத்தே…
முத்துப்பூ சூடிக்கொள்ளூம் நாள் சொல்வா…
பெண் : ராசாவே…
ஆண் : ராசாத்தி…
பெண் : ராசாவே…
ஆண் : ராசாத்தி…
பெண் : உன்னை எண்ணி மனம் உருகி நின்றேன் இங்கே…
பெண் : ராசாவே…
ஆண் : ராசாத்தி…
பெண் : ராசாவே…
ஆண் : ராசாத்தி…
பெண் : உன்னை எண்ணி மனம் உருகி நின்றேன் இங்கே…
Notes : Raasaathi Song Lyrics in Tamil. This Song from Poovarasan (1996). Song Lyrics penned by Vaali. ராசாத்தி ராசாத்தி பாடல் வரிகள்.
