பாடலாசிரியர் | பாடகர் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
மதன் கார்க்கி | எஸ். ஜே. சூர்யா | எஸ். ஜே. சூர்யா | இசை |
Puthaandin Muthal Naal Song Lyrics in Tamil
—BGM—
பெண் : நியூ இயர்…
நியூ இயர்…
நியூ இயர்…
பெண்: விஸ் யு ஹேப்பி…
ஹேப்பி நியூ இயர்…
ஆண் : புத்தாண்டின்…
முதல் நாள் இது…
புதிதான இசை பூத்தது…
ஒலி வெள்ளம்…
வானத்தை தாக்குது…
ஆண் : நான் என்பது…
நாம் என்றானது…
நாம் என்பது…
நாடு என்றானது…
வரும் நாளும்…
நமதென்றே ஆனது… உ… உ…
ஆண் : பூமி முழுதும்…
வெடிகள் வெடிக்க…
கோடி இதயம்…
இணைந்து துடிக்க…
காலம் புதிதாய்…
கதவு திறக்க…
நேற்றின் வலியை…
உலகம் மறக்க…
ஆண் : வாழ்த்து அலைகள்…
வானைக் கிழிக்க…
ஆழ்ந்து உறங்கும்…
கடவுள் விழிக்க…
தாழ்ந்து இறங்கி…
எனக்குள் குதிக்க…
ஊனும் உயிரும்…
இசையில் ஒலிக்க…
ஆண் : வா புத்தாண்டே…
பேரின்பங்கள் கொண்டேன்…
கொண்டாடும் இந்நாளில்…
தந்தோமே பூச்சென்டே… ஏ…
—BGM—
ஆண் : பழங்கதைகளை…
பேசிப் பேசி…
மனம் முழுவதும்…
தூசித் தூசி…
அதை தொடைத்திட…
யோசி யோசி…
புதுக் கனவுகள்…
யாசி யாசி…
ஆண் : உழைப்பினில்…
உண்மை வைத்தால்…
உண்மையில்…
உழைப்பு வைத்தால்…
உழைப்பினில்…
உயர்வு தோன்றும்…
உயர்வான பாதை…
தோன்றும்…
ஆண் : புதிய வழிகளைக்…
கண்டதனால்…
நேற்று நமதல்லவா… ஆ…
புதிய வழிகளைக்…
கொண்டதனால்….
இன்றும் நமதல்லவா… ஆ…
சிறு சிறு கண்ணில்…
புதுக்கனவுகள் கண்டால்…
ஆண் : நாளை…
நமதல்லவா… ஆ…
நாளை நமதல்லவா…
நாளும் நமதல்லவா…
ஆண் : கால நதியை…
ஆள நினைத்தோம்…
நீந்திக் கடக்க…
நெஞ்சம் துடித்தோம்…
வானத்திரையில்…
வண்ணம் தெளித்தோம்…
பூமி முழுதும்…
பூக்கள் விரித்தோம்…
ஆண் : புத்தாண்டின்…
முதல் நாள் இது…
புதிதான இசை பூத்தது…
ஒலி வெள்ளம்…
வானத்தைத் தாக்குது…
ஆண் : நான் என்பது…
நாம் என்றானது…
நாம் என்பது…
நாடு என்றானது…
வரும் நாளும்…
நமதென்றே ஆனது… உ… உ…
ஆண் : பூமி முழுதும்…
வெடிகள் வெடிக்க…
கோடி இதயம்…
இணைந்துத் துடிக்க…
காலம் புதிதாய்…
கதவு திறக்க…
நேற்றின் வலியை…
உலகம் மறக்க…
ஆண் : வாழ்த்து அலைகள்…
வானைக் கிழிக்க…
ஆழ்ந்து உறங்கும்…
கடவுள் விழிக்க…
தாழ்ந்து இறங்கி…
எனக்குள் குதிக்க…
ஊனும் உயிரும்…
இசையில் ஒலிக்க…
ஆண் : வா வா…
புத்தாண்டே…
பேரின்பங்கள் கொண்டேன்…
கொண்டாடும் இந்நாளில்…
தந்தோமே பூச்சென்டே… ஏ…
Notes : Puthaandin Muthal Naal Song Lyrics in Tamil. This Song from Isai (2015). Song Lyrics penned by Madhan Karky. புத்தாண்டின் முதல் நாள் பாடல் வரிகள்.