புல்வெளி புல்வெளி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.எஸ். சித்ராதேவாஆசை

Pulveli Pulveli Song Lyrics in Tamil


—BGM—

பெண் : புல்வெளி புல்வெளி தன்னில்…
பனித்துளி பனித்துளி ஒன்று…
தூங்குது தூங்குது பாரம்மா…

பெண் : அதை சூாியன் சூாியன் வந்து…
செல்லமாய் செல்லமாய் கிள்ளி…
எழுப்புது எழுப்புது ஏனம்மா…

பெண் : இதயம் பறவை போலாகுமா…
பறந்தால் வானமே போதுமா…
நான் புல்லில் இறங்கவா…
இல்லை பூவில் உறங்கவா…

பெண் : புல்வெளி புல்வெளி தன்னில்…
பனித்துளி பனித்துளி ஒன்று…
தூங்குது தூங்குது பாரம்மா…

—BGM—

பெண் : சிட்சிட்சிட் சிட்சிட்சிட்சிட் சிட்டுக்குருவி…
சிட்டாகச் செல்லும் சிறகைத் தந்தது யாரு…
பட்பட்பட்பட் பட்பட்பட் பட்டாம்பூச்சி…
பலநுாறு வண்ணம் உன்னில் தந்தது யாரு…

பெண் : இலைகளில் ஒளிகின்ற பூக் கூட்டம்…
எனைக்கண்டு எனைக்கண்டு தலையாட்டும்…
கிளைகளில் ஒளிகின்ற குயில் கூட்டம்…
எனைக்கண்டு எனைக்கண்டு இசை மீட்டும்…

பெண் : பூவனமே எந்தன் மனம்…
புன்னகையே எந்தன் மதம்…

பெண் : அம்மம்மா…
வானம் திறந்திருக்கு பாருங்கள்…
எனை வானில் ஏற்றிவிட வாருங்கள்…

—BGM—

பெண் : புல்வெளி புல்வெளி தன்னில்…
பனித்துளி பனித்துளி ஒன்று…
தூங்குது தூங்குது பாரம்மா…

—BGM—

பெண் : துல்துல்துல் துல்துல்துல்லும் அணிலே…
மின்னல்போல் வேகம் தந்தது யாரு…
ஜல்ஜல்ஜல் ஜல்ஜல்ஜல்லென ஓடும் நதியே…
சங்கீத ஞானம் பெற்றுத் தந்தது யாரு…

பெண் : மலையன்னை தருகின்ற தாய்ப்பால் போல்…
வழியுது வழியுது வெள்ளை அருவி…
அருவியை முழுவதும் பருகிவிட…
ஆசையில் பறக்குது சின்னக்குருவி…

பெண் : பூவனமே எந்தன் மனம்…
புன்னகையே எந்தன் மதம்…

பெண் : அம்மம்மா…
வானம் திறந்திருக்கு பாருங்கள்…
எனை வானில் ஏற்றிவிட வாருங்கள்…

—BGM—


Notes : Pulveli Pulveli Song Lyrics in Tamil. This Song from Aasai (1995). Song Lyrics penned by Vaali. புல்வெளி புல்வெளி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading