தாமிரபரணி ராணி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா.விஜய்கிருஷ்ணகுமார் குன்னத் & ஸ்ரேயா கோஷல்பரத்வாஜ்ஐயா

Thamirabarani Raani Song Lyrics in Tamil


BGM

ஆண் : என் தாமிரபரணி ராணி…
செந்தாமரை மேனி…
நான் தாலி கட்ட…
காத்துகிடக்கேன் வா வா…

பெண் : அட வல்ல நாட்டு மலையே…
என் வாலிப துரையே…
நான் தாலி கட்ட…
சம்மதம் சொன்னேன் வா வா…

ஆண் : ஓ… ஜோசியத்த பார்த்தாச்சு…
ஜாதகமும் சேர்ந்தாச்சு…
பத்திரிகை அடிச்சாச்சு…
பந்த கால் நட்டாச்சு…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : அச்சதையும் போட்டாச்சு…
அப்புறம் என்னாச்சு…

ஆண் : ஏ… தாமிரபரணி ராணி…
செந்தாமரை மேனி…
நான் தாலி கட்ட…
காத்துகிடக்கேன் வா வா…

BGM

பெண் : மணக்க மணக்க அயிர மீன வாங்கி…
ருசி ருசியாக சமைப்பேன்…

பெண் : நான் தேனையும் ஊத்தி வருப்பேன்தானே…
உனக்கின்னு காத்து கெடப்பேன்…

ஆண் : கம்ப கூழ நீயும் கரைச்சி தந்தா…
அதுதான் சக்கர பொங்கல்…

ஆண் : உன் கன்னத்தில் தேச்சு வென் பளிங்காச்சு…
கதவோரத்து செங்கல்…

பெண் : குழம்புக்கு நான் அரைச்ச மஞ்சள்…
செவக்கயிலே உன் நெனப்பு…
கூட்டான்சோறு ஆக்கையிலே…
பானையில் பொங்கும் உன் சிரிப்பு…

ஆண் : ஏ… பாலூத்தி செஞ்சானா…
பனி ஊத்தி செஞ்சானா…
உன் உதடு ஒவ்வொன்னா…
தேன் ஊத்தி செஞ்சானா…

பெண் : ஓ… உதிரத்து உரியாக…
உள் மனம் ஆடுதய்யா…

ஆண் : ஏ… தாமிர பரணி ராணி…
செந்தாமரை மேனி…
நான் தாலி கட்ட காத்துகிடக்கேன் வா வா…

BGM

பெண் : ஹே… கடலை காட்டில் நடந்து போகும் போது…
தொலைஞ்சது வெள்ளி கொலுசு…

பெண் : உன் கை விரல் கோத்து நடக்கும் போது…
காணாம போச்சு மனசு…

ஆண் : நூறு ஏக்கர் மல்லி தோட்டம் போட்டேன்…
வாசனை என்ன வாசம்…

ஆண் : உன் ஏழரை இஞ்சு இடுப்பின் வாசம்…
ஆளையும் தூக்கி வீசும்…

பெண் : நீ கடிச்ச வேப்பம் குச்சி…
நட்டு வச்சா துளிர்க்குதய்யா…
உன் பாதத்தை நெனச்ச ஓட தண்ணி…
பதநீராக இனிக்குதையா…

ஆண் : ஏ… மயிலிறகு கண்ணால…
மனசுக்குள்ள கீறுறியே…
கேழ் வரகு கூழாக…
என் உசுர கிண்டுறாயே…

பெண் : ஏ… என் ரவிக்கையில போட்ட கொக்கி…
பட்டுனு தெறிக்குதய்யா…

ஆண் : ஏ… தாமிர பரணி ராணி…
செந்தாமரை மேனி…
நான் தாலி கட்ட…
காத்துகிடக்கேன் வா வா…

பெண் : அட வல்ல நாட்டு மலையே…
என் வாலிப துரையே…
நான் தாலி கட்ட…
சம்மதம் சொன்னேன் வா வா…

ஆண் : ஓ… ஜோசியத்த பார்த்தாச்சு…
ஜாதகமும் சேர்ந்தாச்சு…
பத்திரிகை அடிச்சாச்சு…
பந்த கால் நட்டாச்சு…

பெண் : அச்சதையும் போட்டாச்சு…
அப்புறம் என்னாச்சு…


Notes : Thamirabarani Raani Song Lyrics in Tamil. This Song from Ayya (2004). Song Lyrics penned by Pa.Vijay. தாமிரபரணி ராணி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading