புதிய வானம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிடி.எம்.சௌந்தரராஜன்எம்.எஸ்.விஸ்வநாதன்அன்பே வா

Pudhiya Vaanam Song Lyrics in Tamil


BGM

ஆண் : புதிய வானம்… வானம்… வானம்…
புதிய பூமி… புதிய பூமி… புதிய பூமி…

BGM

ஆண் : புதிய வானம் புதிய பூமி…
எங்கும் பனி மழை பொழிகிறது…
நான் வருகையிலே என்னை வரவேற்க…
வண்ண பூமழை பொழிகிறது… ஓஹோ ஹோ…

BGM

ஆண் : புதிய வானம் புதிய பூமி…
எங்கும் பனி மழை பொழிகிறது…
நான் வருகையிலே என்னை வரவேற்க…
வண்ண பூமழை பொழிகிறது… ஓஹோ ஹோ…

BGM

ஆண் : புதிய சூரியனின் பார்வையிலே…
உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே…
புதிய சூரியனின் பார்வையிலே…
உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே…

ஆண் : இமயத்தில் இருக்கும் குளிர்காற்று…
இன்று இதயத்தை தொடுகிறது…
அன்று இமயத்தில் சேரன் கொடி பறந்த…
அந்த காலம் தெரிகிறது…
அந்த காலம் தெரிகிறது…

ஆண் : ஓஓஓ… லால லா லா லா…
ஓஓஓ… லால லா லா லா…

ஆண் : புதிய வானம் புதிய பூமி…
எங்கும் பனி மழை பொழிகிறது…
நான் வருகையிலே என்னை வரவேற்க…
வண்ண பூமழை பொழிகிறது… ஓஹோ ஹோ…

BGM

ஆண் : பிள்ளைக்கூட்டங்களை பார்க்கையிலே…
பிஞ்சு மொழிகளை கேட்கையிலே…
பிள்ளைக்கூட்டங்களை பார்க்கையிலே…
பிஞ்சு மொழிகளை கேட்கையிலே…

ஆண் : நல்லவர் எல்லாம் நலம் பெறுவார்…
என்ற நம்பிக்கை பிறக்கிறது…

ஆண் : இவர் வரவேண்டும்…
புகழ் பெறவேண்டும்…
என்று ஆசை துடிக்கிறது…
என்று ஆசை துடிக்கிறது…

ஆண் : ஓஓஓ… லால லா லா லா…
ஓஓஓ… லால லா லா லா…

ஆண் : புதிய வானம் புதிய பூமி…
எங்கும் பனி மழை பொழிகிறது…
நான் வருகையிலே என்னை வரவேற்க…
வண்ண பூமழை பொழிகிறது… ஓஹோ ஹோ…

BGM

ஆண் : எந்த நாடு என்ற கேள்வியில்லை…
என்ன ஜாதி என்ற பேதமில்லை…
எந்த நாடு என்ற கேள்வியில்லை…
என்ன ஜாதி என்ற பேதமில்லை…

ஆண் : மனிதர்கள் அன்பின் வழி தேடி…
இங்கு இயற்கையை வணங்குகிறார்…

ஆண் : மலை உயர்ந்தது போல்…
மனம் உயர்ந்ததென்று
இவர் வாழ்வில் விளக்குகிறார்…
இவர் வாழ்வில் விளக்குகிறார்…

ஆண் : ஓஓஓ… லாலலா லா லா…
ஓஓஓ… லாலலா லா லா…

ஆண் : புதிய வானம் புதிய பூமி…
எங்கும் பனி மழை பொழிகிறது…
நான் வருகையிலே என்னை வரவேற்க…
வண்ண பூமழை பொழிகிறது… ஓஹோ ஹோ…

BGM

ஆண் : ஓ ஓ ஓ… லாலலா லா லா…
ஓ ஓ ஓ… லாலலா லா லா…
ஓ ஓ ஓ… லாலலா லா லா…
ஓ ஓ ஓ… லாலலா லா லா…


Notes : Pudhiya Vaanam Song Lyrics in Tamil. This Song from Anbe Vaa (1966). Song Lyrics penned by Vaali. புதிய வானம் பாடல் வரிகள்.


Scroll to Top